வரப்போற வெயில் காலத்துக்கு இப்படி ஒரு லெமன் ஜூஸ் போட்டு உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து பாருங்கள். சமையல் ராணி பட்டம் உங்களுக்குத் தான்.

lemon-juice
- Advertisement -

லெமன் ஜூஸ் போடுறதுல என்னங்க கஷ்டம் இருக்கு. ஜில் தண்ணியில லெமன் ஜூஸ், சக்கரையை போட்டா, லெமன் ஜூஸ் ரெடி. இப்படிதானே உங்க வீட்ல லெமன் ஜூஸ் போடுவீங்க. ஆனால் லெமன் ஜூஸ் போட்டுவதிலேயும் ஒரு டிரிக் இருக்குதுங்க. இந்த மாதிரி லெமன் ஜூஸ் போட்டு குடித்து பாருங்கள். உங்கள் வாழ்நாளில் பிறகு சாதாரணமான லெமன் ஜூஸை நீங்கள் குடிக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு அற்புதமான ஒரு லெமன் ஜூஸ் ரெசிபி உங்களுக்காக. வரப்போற வெயில் காலத்துக்கு இது ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்

ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோல் சீவிய இஞ்சி – 1 இன்ச், ஏலக்காய் – 2, உப்பு – 2 சிட்டிகை, பச்சை திராட்சை – 10, புதினா இலைகள் – 10, சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன். இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த விழுதை திப்பி இல்லாமல் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த எசன்ஸ் டீ குடிக்கும் ஒரு டம்ளர் அளவு வந்தால் போதும். இது தான் நாம் எலுமிச்சை பழச்சாறில் சேர்க்கபோகும் எசன்ஸ்.

- Advertisement -

ஒரு அகலமான கிண்ணத்தில் 2 பெரிய டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் தேவையான ஐஸ் கியூப் போட்டுவிடுங்கள். அதன்பின்பு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதனுடைய சாறை அதில் நன்றாக பிரிந்து விடுங்கள். அதன் பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து வடிகட்டி தயாராக இருக்கும் எசன்ஸை ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த எல்லா பொருட்களையும் ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். சர்க்கரையை எல்லாம் மிக்ஸியில் போட்டு அரைத்து விட்டதால் எல்லாம் கரைந்து இருக்கும்.

இப்போது இதை இரண்டு பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். ஆகா இதல்லவா லெமன் ஜூஸ். குடிப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணிக்க இப்படிப்பட்ட ஜூஸை தினமும் எடுத்துக் கொண்டாலும் தவறு கிடையாது.

- Advertisement -

குறிப்பாக இந்த ஜூஸில் நாம் புதினா இஞ்சி எல்லாம் சேர்த்து எலுமிச்சை பழச்சாறு தயார் செய்து இருக்கின்றோம் அல்லவா. இதன் மூலம் எலுமிச்சை பழத்தில் இருக்கும் குளிர்ந்த தன்மை உங்களுக்கு தலைவலி சளியை கொடுக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஜூஸை தாராளமாக குடிக்கலாம்.

பிறகென்ன இப்படி ஒரு ஜூஸ் போட்டு கொடுத்தா நீங்கதான் சமையல் ராணி. மிஸ் பண்ணாதீங்க உங்க வீட்ல நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -