திராட்சையில் இருக்கும் இந்த ஆசிட் நம்முடைய முகத்தை தங்கம் போல மின்ன செய்யுமா? எந்த வகையான சருமமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சூப்பர் ஃபேஸ் பேக்!

grape-aha-face-pack
- Advertisement -

மனிதனுடைய சருமம் பலதரப்பட்டதாக இருக்கிறது. எண்ணெய் பசை உள்ள சருமம், வறண்ட சருமம், சென்சிடிவ் சருமம், நார்மல் சருமம், டேமேஜ்டு சருமம் என்று பல வகையில் பிரிக்கப்பட்டுள்ள நம்முடைய சருமத்திற்கு எல்லா வகையான ஃபேஸ் பேக்குகளையும் பயன்படுத்த கூடாது. உங்களுடைய சருமம் எந்த வகை? என்பதை அறிந்து அதற்கு உரிய ஃபேஸ் பேக்குகள் போடும் பொழுது தான் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த ஒரு ஃபேஸ் பேக், எந்த வகையான சருமத்திற்கும் பொருந்தக்கூடியது.

திராட்சையில் இருந்து உருவாகக்கூடிய நல்ல ஆசிட் மூலம், நம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடிய இந்த பேஸ் பேக் வியப்பிற்குரிய மாற்றத்தை நம் சருமத்திற்கு கொடுக்கப் போகிறது. சருமம் பளிங்கு போல ஜொலிக்க அதிக செலவில்லாத இந்த குறிப்பை எப்படி பயன்படுத்துவது? என்கிற ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். ஆசிட் என்றதும் எல்லோருக்கும் ஒரு பயம் உண்டாகி இருக்கும். பொதுவாக ஆசிட் என்பது மோசமான அமிலத்தை குறிக்கும் சொல்லாக இருக்கிறது ஆனால் இந்த இயற்கையான திராட்சையிலிருந்து கிடைக்கக்கூடிய ஆசிட் நல்ல வகையாக இருக்கிறது. இதை ஆல்ஃபா ஹைட்ராக்சி ஆசிட் (AHA) என்று கூறுவார்கள்.

- Advertisement -

இந்த AHA நமக்கு திராட்சையில் இருந்து எப்படி கிடைக்கிறது? இதை பயன்படுத்தி எப்படி சூப்பர் ஃபேஸ் பேக் போட போகிறோம்? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை தொடர்ந்து பார்ப்போம். முதலில் அரை கிலோ அளவிற்கு பன்னீர் திராட்சையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த திராட்சையில் விதைகள் இருக்க வேண்டும். விதை உள்ள இந்த பன்னீர் திராட்சையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அரைத்த இந்த விழுதை கொஞ்சம் கூட காற்று போகாத ஒரு டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்கு பிறகு இதை எடுத்து பார்த்தால் திராட்சையின் மேற்புறத்தில் இந்த AHA உருவாக்கி இருக்கும். இந்த ஆல்பா ஹைட்ராக்சி ஆசிட் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி அதிகமான புதிய செல்களை வளர ஊக்குவிக்கிறது. புதிய செல்கள் அதிகம் வளர்வதால் முகத்தில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகும்.

- Advertisement -

நம்முடைய சருமத்தை நாம் சரியாக பராமரிப்பது கிடையாது. இதனால் செல்கள் இறந்து முகத்தின் முதல் தோல் அடுக்குகளில் படிந்து விடும். இந்த முதல் அடுக்கில் இருக்கும் டெத் செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக ஊக்குவிக்கிறது. இந்த திராட்சை கூழிலிருந்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆவாரம் பூ பொடி சேர்க்க வேண்டும். ஆவாரம் பூக்களை உலர்த்தி பொடியாக செய்து வைத்துக் கொண்டால் நல்லது. இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் ஆவாரம் பூ பவுடர் கிடைக்கும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இவை அனைத்தையும் நன்கு கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, முகத்தை அலசிப் பாருங்கள், எத்தகைய சருமம் கொண்டவர்களாக இருந்தாலும் உங்களுடைய சருமத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அது ரெண்டு நாட்களில் நீக்கி இருக்கும். ரெண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த ஃபேஸ் பேக் போட வேண்டும். தொடர்ந்து இது போல ஒரு மாதம் போட்டுப் பாருங்கள், நம்முடைய முகமா இது? என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

- Advertisement -