மரண சாஸ்திரத்தை கூறிய ஏழை சிறுமி – குட்டி கதை

sirumi
- Advertisement -

சென்னையில் படு சுருருப்போடு மக்கள் இயங்கிக்கொண்டிருந்தனர். சாலை ஒன்றில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரெட் சிக்னல் விழுந்ததால் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. அந்த சிக்னலில் இருந்த ஏழை சிறுமி ஒருவள் அங்கு நிறுத்தப்பட்ட ஒரு கார் அருகே சென்றால். மெதுவாக காரின் கதவுகளை தட்டினால்.

car

காரில் இருந்த ஒருவர் கார் கதவு கண்ணாடியை இறக்கி விட்டு. என்னமா காசு எதுவும் வேணுமா ? என்று கேட்கிறார். சில நொடிகள் மெளனமாக இருந்த அந்த சிறுமி காரில் உள்ள அனைவரையும் உற்று பார்க்கிறாள். அதில் ஒரு பெற்றோர் தன் குழந்தையோடு பயணித்துக்கொண்டிருப்பதை காண்கிறாள். அதோடு அந்த காரில் ஒருவர் புகை பிடித்துக்கொண்டிருப்பதையும் காண்கிறாள்.

- Advertisement -

மீண்டும் அந்த நபர் என்னமா வேண்டும் உனக்கு என்று கேட்கிறார். அந்த சிறுமி எதையோ சில நொடிகள் யோசித்துவிட்டு, எனக்கு எதுவும் வேண்டாம் ஐயா ஆனால் உங்கள் குழந்தைக்கு நீங்கள் அனைத்தையும் தரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கிறாள்.

begger girl

 

- Advertisement -

ஏம்மா இப்படி கேக்குற என்று அந்த நபர் கேட்க, நீங்க உங்க குழந்தைக்கு எல்லாத்தையும் கொடுப்பேன்னு சொன்னிங்க ஆனா அது பொய்யோனு தோணுது. நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ இல்லையோ தயவு செய்து வறுமையை மட்டும் கொடுத்துறாதீங்க. அது மிகவும் கொடியது. நீங்கள் உங்கள் குழந்தைக்கு அனைத்தையும் கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் தயவு செய்து இந்த புகை பழக்கத்தை நிறுத்திவிடுங்கள் ஐயா என்று கூறுகிறாள்.

begger girl

இன்னைக்கு என் தந்தை உயிரோடு இருந்திருந்தால் நான் இவளவு ஏழ்மையில் இருந்திருக்க மாட்டேன் நீங்களும் என்னை பிச்சைக்காரி என்று நினைத்திருக்க மாட்டீர்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்த அமைதியாய் அவள் நகர்கிறாள். சிகனால் மாறியதால் அங்கிருந்த வாகனங்களும் நகர்ந்தது. ஆனால் அந்த காரில் இப்போது சிகரெட் புகையின் நாற்றம் துளிகூட இல்லை.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :
முட்டாள் தனமான பக்திக்கு இறைவன் கற்பித்த பாடம் – குட்டி கதை

புகை பழக்கம், குடி பழக்கம் இப்படி நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட பழக்கங்களை விடுத்து. நம்மையே நம்பி இருக்கும் நம் உறவுகளோடு நீண்ட நாட்கள் சந்தோசமாக வாழ முயற்சிப்போம்.

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான சிறு கதைகள், குட்டி கதைகள் மற்றும் தத்துவ கதைகளை உடனுக்குடன் பெற எங்களுடைய மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து எங்களோடு இணைந்திருங்கள்.

 

- Advertisement -