முட்டாள் தனமான பக்திக்கு இறைவன் கற்பித்த பாடம் – குட்டி கதை

sivan-1
- Advertisement -

ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு நாள் விறகு வெட்ட செல்லும்போது ஒரு வயதான நரியை அவன் கண்டான். அந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லை ஆனால் அது தெம்போடுதான் இருந்தது. எப்படி இந்த நரி இரண்டு கால்களும் இல்லாமல் வேட்டையாடுகிறது என்றெண்ணி அந்த விறகு வெட்டி ஆச்சரியப்பட்டார்.

wood cutter

அந்த சமயத்தில் திடீரென அங்கு புலி வரும் சத்தம் கேட்டது. உடனே அந்த விறகு வெட்டி ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டு நடப்பதை கவனித்தார். ஒரு மானை வேட்டையாடி அதை தின்பதற்காக அந்த புலி அங்கு வந்தது. மானை நன்றாக உண்டுவிட்டு மிச்சத்தை அங்கேயே விட்டு சென்றது. புலி சென்றதை உறுதி செய்துகொண்ட நரி அங்கு வந்து மிச்சம் இருந்த மானின் மாமிசத்தை உண்டு தன் பசியை போக்கிக்கொண்டது.

- Advertisement -

இவை அனைத்தையும் கண்ட விறகு வெட்டி, கால் இல்லாத நரிக்கே இறைவன் உணவளிக்கிறாரே, நாமோ இறைவன் மீது அதிக பக்தி கொண்டவர் நமக்கு இறைவன் உணவளிக்கமாட்டாரா என்ன ? நாம் ஏன் இவளவு கஷ்டப்பட்டு விறகு வெட்டி பிழைப்பு நடத்த வேண்டும் என்று எண்ணி தன் கோடாரியை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தன் வீட்டிற்கு சென்று அமர்ந்து விட்டார். அவ்வப்போது கோயிலிற்கு மட்டும் சென்று இறைவனை தரிசித்துவிட்டு வந்தார்.

temple

நாட்கள் சென்றுகொண்டிருந்தது ஆனால் அவருக்கு யாரும் எந்த உணவும் அளிக்கவில்லை. ஒருவேளை இறைவன் நம் பக்தியை உணரவில்லையா என்று எண்ணி ஒருகட்டத்தில் கோவிலிலேயே அமர தொடங்கிவிட்டார். நாட்கள் சென்றது, அவருக்கு உடம்பில் இருந்த தெம்பு குறைந்தது, எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார்.

- Advertisement -

அவரால் இப்போது எதையும் செய்ய முடியவில்லை. ஒரு நாள் இரவு கோவிலில் இருந்து அனைவரும் சென்ற பிறகு அவர் இறைவனிடம் வேண்ட தொடங்கினார். கால் இல்லாத அந்த நரிக்கு உணவளித்த நீ எனக்கு மட்டும் ஏன் உணவளிக்கவில்லை என்னை உனக்கு பிடிக்கவில்லையா இறைவா என்றார்.

sivan

இதையும் படிக்கலாமே:
சுடுகாட்டில் ஆடும் சிவன் என்று கேலி செய்வதற்கு பின் உள்ள உண்மை

சிறிது நேரத்தில் இறைவன் பேச துவங்கினார். அடேய் மூடனே, காட்டில் நடந்த நிகழ்வை வைத்து நீ நரி இடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டது உன்னுடைய மூட தனம். புலியை போல தனக்கு தேவையானதை உழைத்து பெற்று, தனக்கு மிஞ்சியதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற பாடத்தையே நீ அன்று கற்றிருக்க வேண்டும். என் மீது நம்பிக்கை இருப்பதில் தவறில்லை ஆனால் என்னை மட்டுமே நம்பி இருப்பது தான் தவறு. நீ முதலில் உன்னை நம்ப வேண்டும் பிறகு தான் என்னை நம்ப வேண்டும் என்று கூறி இறைவன் மறைந்தார்.

இது போன்ற மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் சிறு கதைகளை உடனுக்கூட பெற தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -