அடிக்கிற வெயிலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடிய லெமன் ஜூஸ். இதுமாதிரி ஜூஸ் எங்கேயுமே டேஸ்ட் பண்ணி இருக்க மாட்டீங்க.

juice
- Advertisement -

ஒரே மாதிரி லெமன் ஜூஸ் போட்டு குடித்தால் கொஞ்சம் போரடிக்க தான் செய்யும். கொஞ்சம் வித்தியாசமாக கேரளா ஸ்டைலில் புதுவிதமான ஈஸியான லெமன் ஜூஸ் எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 2 வெரைட்டி லெமன் ஜூஸ். அட்டகாசமா இருக்கபோகுது. ஒரு லெமன் ஜூஸ் வெள்ளை நிறத்தில் இருக்கும். மற்றொன்று பச்சை நிறத்தில இருக்கும். 2 லெமன் ஜூசுமே சும்மா நச்சுன்னு வெயிலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியது. வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

தேங்காய் சேர்த்த வெள்ளை நிற லெமன் ஜூஸ்:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மீடியம் சைஸில் பழுத்த ஒரு எலுமிச்சைப் பழச்சாறை பிழிந்து கொள்ள வேண்டும். ஒரு கொட்டை கூட இருக்கக்கூடாது. கொட்டை இருந்தால் ஜூஸின் சுவை மாறிவிடும். அந்த எலுமிச்சம் பழத்தோலில் இருந்து 1/2 இன்ச் அளவு தோலை மட்டும் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பெரிய மிக்ஸி ஜாரில் எலுமிச்சை பழச்சாறு, எலுமிச்சை பழத்தோல் உள்ளது. இதோடு தோல் சீவிய இஞ்சி – 1/2 இன்ச் அளவு, புதினா இலைகள் – 2, ஒரு விரல் அளவு – தேங்காய் பத்தை, உப்பு – 1/4 ஸ்பூன், சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு மிக்ஸி ஜாரில் ஒருமுறை கொரகொரப்பாக ஒட்டி விடுங்கள். அதன் பின்பு 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி மிக்ஸியை வேகமாக நன்றாக இரண்டு நிமிடம் ஓட விடுங்கள். எல்லா பொருட்களும் நைஸாக அரைபட்டு விடும்.

மேலே சொன்ன இந்த அளவுக்கு 2 பெரிய கண்ணாடி டம்ளர் தண்ணீர் சரியானதாக இருக்கும். ஜில்லுனு இருக்கக்கூடிய இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை மிக்ஸி ஜாரில் இருக்கும் சாறுடன் ஊற்றி நன்றாக கலந்து அப்படியே ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளைப் போட்டு குடித்து பாருங்கள். இதனுடைய சுவை எப்படி இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். தேவைப்பட்டால் இந்த ஜூஸை வடிகட்டி குடித்துக் கொள்ளுங்கள். தேங்காயை ஜூஸில் சேர்க்கும்போது மேலே இருக்கும் பிரவுன் கலர் தோலை சீவி விடுங்கள். அப்போதுதான் ஜூஸ் பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் அழகாக தெரியும்.

- Advertisement -

பச்சை நிறத்தில் இருக்கும் கூடிய லெமன் ஜூஸ்:
ஒரு பெரிய மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் புதினா இலைகள் – 20, தோல் சீவிய இஞ்சி – 1 இன்ச், பச்சை மிளகாய் – 1/4 துண்டு, லெமன் ஜூஸ் – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – 2 சிட்டிகை, ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன் சேர்த்து அரை தம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி மிக்ஸியை நன்றாக ஓட விடுங்கள். நுரைக்க நுரைக்க இந்த ஜூஸ் அரைபட்டு வரவேண்டும்.

மிக்ஸி ஜாரில் இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக அரைபட்டு வந்தவுடன் இதோடு இன்னும் 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கலந்து ஒரு வடிகட்டியில் வடிகட்டி கொள்ளுங்கள். அவ்வளவுதான் இந்த சாருடன் ஐஸ் கட்டிகளைப் போட்டு பச்சையாக இருக்கக்கூடிய இந்த ஜூஸை குடித்து பாருங்கள். உங்களுடைய உடல் உடனடியாக புத்துணர்ச்சியை பெறும். ஒரு கிளாஸ் தண்ணீருக்கு இந்த அளவுகள் சரியாக இருக்கும்.

பச்சை மிளகாயை நிறைய சேர்க்கக்கூடாது. ஒரு வாசத்திற்கு விதைகள் இல்லாத சிறிய துண்டாக எடுத்து சேர்த்துக்கொள்ளுங்கள். ஃபிரஷ்ஷாக பசுமையாக இருக்கக்கூடிய புதினா இலைகளை இந்த ஜூஸுக்கு பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகமாக இருக்கும். அடிக்கிற வெயிலுக்கு இந்த ஜூஸ் ரெசிபிகளை யாருமே மிஸ் பண்ணாதீங்க.

- Advertisement -