ஒருமுறை கோவைக்காயை இப்படி வறுத்து கொடுங்கள். ஐந்தே நிமிடத்தில் அனைத்தும் காலியாகி விடும்..

kovaikai fry
- Advertisement -

நம்முடைய அன்றாட உணவில் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில் இன்று பல அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட கோவைக்காயை வைத்து எப்படி வறுவல் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கோவைக்காயை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பொழுது தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். அது மட்டுமல்லாமல் தலைமுடி பிரச்சனையான முடி உதிர்தல் குறைகிறது. பற்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். குறைந்த கலோரிகளைக் கொண்ட கோவைக்காயை உண்பதால் தொப்பை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சர்க்கரை அளவை குறைக்கும் ஒரு அற்புதமான காயாகவும் இந்த கோவைக்காய் விளங்குகிறது. அது மட்டுமல்லாமல் உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட கழிவுகளை நீக்கி சிறுநீரக கல் உருவாகாமல் இந்த கோவைக்காய் உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கோவைக்காய் – 1/2 கிலோ
  • கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • எண்ணெய் பொறிப்பதற்கு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கோவைக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு இதனுடன் நறுக்கி வைத்திருக்கும் கோவைக்காயை சேர்க்க வேண்டும்.

அதில் சிறிதளவு தண்ணீரை தெளித்துவிட்டு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கால் மணி நேரத்தில் இருந்து அரை மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கோவைக்காயை பொரிப்பதற்கு ஏற்ற அளவு எண்ணெயில் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு கோவை காயை ஒன்றொன்றாக உதிரியாக போட்டு நன்றாக சிவக்கும் அளவிற்கு அடுப்பில் குறைந்த தீயில் வைக்க வேண்டும்.

கோவைக்காய் நன்றாக சிவந்த பிறகு வடிகட்டியை பயன்படுத்தி எண்ணெயை நன்றாக வடித்து விட்டு ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளலாம். அலங்காரத்திற்காக சிறிது கருவேப்பிலையை குறித்து அதன் மேல் தூவி விடலாம் எளிமையான கோவக்காய் வறுவல் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: காலை டிபனுக்கு அட்டகாசமான தக்காளி அவல் உப்புமா ரெசிபி.

இந்த முறையில் நாம் கோவக்காயை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது குழந்தைகள் அதை சிப்ஸ் ஆக நினைத்து சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -