க்ரீன் டீ குடிக்க மட்டும் இல்லைங்க நீங்கள் அழகாக இருக்கவும் பயன்படும் தெரியுமா? பேரழகு தரும் கிரீன் டீ மாஸ்க் வீட்டிலேயே எளிதாக 10 பைசா செலவில்லாமல் எப்படி செய்வது?

green-tea-mask
- Advertisement -

கிரீன் டீ உடல் உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்லாமல் சரும பராமரிப்புக்கும் பெரும் பங்கு உதவி செய்கிறது. கிரீன் டீயில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இதனால் க்ரீன் டீ குடிப்பவர்களுக்கு கெட்ட கொழுப்புகள் கரைந்து, உடல் பருமன் பிரச்சனைக்கு வெகு விரைவாக தீர்வு கொடுக்கிறது. பால், சர்க்கரை எதுவும் சேர்க்காத இந்த கிரீன் டீ சூடான தண்ணீரில் 10 முறை டிப் செய்து அப்படியே இளஞ்சூடாக பருகி விட வேண்டும்

இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இளமையான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதனால் வரக்கூடிய முதுமையை சற்று தள்ளிப் போடுகிறது. க்ரீன் டீயில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம் உண்டு. இது உடல் உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்லாமல், சருமத்தில் வெயிலினால் வரக்கூடிய பாதிப்புகளிலிருந்து நல்லதொரு பாதுகாப்பை வழங்குகிறது. இந்த கிரீன் டீ மாஸ்க் எப்படி வீட்டிலேயே எளிதாக நாம் தயாரிப்பது? என்பதை தான் இனி இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

கிரீன் டீ பயன்படுத்துபவர்கள் ஐந்தாறு பேக்குகளை கத்தரித்து அதிலிருக்கும் டீத்தூளை மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியுடன் தேவையான அளவிற்கு சுத்தமான தேன் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி அரை மணி நேரம் அப்படியே உலர விட்டு பின்னர் முகத்தை கழுவிப் பாருங்கள், முகத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி பளிச்சென முகம் ஜொலிக்கும்.

நாட்பட்ட சரும பிரச்சனைகளை கூட நொடியில் சரி செய்து முகத்தை பேரழகாக மாற்ற கூடிய இந்த கிரீன் டீ பேக் இரவு நேரங்களில் கூட போட்டுக் கொண்டு தூங்கலாம். இதற்கு நீங்கள் கிரீன் டீ பவுடர் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு அதில் அதனுடன் உருளைக்கிழங்கு சாற்றை சேர்க்க வேண்டும். பின்பு நன்கு கலந்து முகம் முழுவதும் தடவிக் கொண்டு அப்படியே தூங்கி விடுங்கள். காலையில் எழுந்ததும் முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவினால் உங்களுடைய முகமா? என்று நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள். அந்த அளவிற்கு முகத்தில் இருக்கக் கூடிய புதிய செல்களை தூண்டி விட்டு நல்ல ஆரோக்கியமான சருமத்தை, இளமையான சருமத்தை கொடுக்கும்.

- Advertisement -

சருமம் சோர்வடைந்து காணப்பட்டால் சருமத்தில் இருக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய கிரீன் டீயுடன் தேன் சேர்த்து அதனுடன் கொஞ்சம் பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கலந்து முகத்தை 10 நிமிடம் மசாஜ் செய்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி ரத்த ஓட்டத்தை சீராக்கி சருமத்தை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இது போல க்ரீன் டீ உள்ளுக்கும், வெளியையும் நீங்கள் முறையாக பயன்படுத்தினால் உடல் சிக்கென்று அழகாகவும், முகம் பளிச்சென்று பேரழகாகவும் மாறும். கிரீன் டீ டாக்சின்ஸ் நீக்கி முகத்தை இன்னும் வெள்ளையாக காண்பிக்கும். கிரீன் டீயுடன் பசும்பால் அல்லது பன்னீர் சேர்த்தும் பயன்படுத்தலாம். இதனால் முக கருமை நீங்கி முகம் வெள்ளையாக உங்களுடைய இயற்கையான நிறத்திற்கு மாறும்.

- Advertisement -