மண்ணே இல்லாமல் வெறும் தண்ணீரில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி? கொத்தமல்லி தழை, புதினா இலை, இஞ்சி போன்றவற்றை அதிக நாட்கள் வரை பராமரிப்பது எப்படி தெரியுமா?

coriander-chilli-ginger
- Advertisement -

மண் இல்லாமல் வெறும் தண்ணீரிலேயே கொத்தமல்லி வளர்க்க முடியும். தனியா விதைகள் மூலம் கொத்தமல்லி விளைகிறது. கொத்தமல்லி விலை என்னவோ எப்போதுமே ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஐந்து ரூபாயில் இருந்து ஐம்பது ரூபாய் வரை ஒரு கொத்தமல்லி கட்டு சீசனுக்கு ஏற்றார் போல் விற்கப்படுகிறது. அதை நாமே வீட்டில் வெறும் தண்ணீரில் உருவாக்கி விடலாம். அதற்கு என்ன செய்வது? கொத்தமல்லி, புதினா, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போன்றவற்றை எப்படி அதிக நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைப்பது? என்பதைப் பற்றியும் இப்பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

kothamalli 4-compressed

தனியா விதைகளை முந்தைய நாள் இரவே ஊறவைத்து மறுநாள் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி விதைகளை விதைக்க ஒரு சிறிய பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் பிளாஸ்டிக் கூடை போல் ஓட்டை ஓட்டையாக இருக்கும் அல்லவா? அது தான் பிளாஸ்டிக் பில்டர் அல்லது மாவு சலிக்கும் சல்லடை கூட எடுத்துக் கொள்ளலாம். அதில் டிஷ்யூ பேப்பர் வைத்து ஊற வைத்து எடுத்த முழு தனியா விதைகளை தூவி விடவும். அதை அப்படியே எடுத்து அந்த பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி கீழே டிஷ்யூ பேப்பரில் லேசாக கூட படாதபடி வைத்து விடவும்.

- Advertisement -

விதைகள் தண்ணீரில் மூழ்கி விடக்கூடாது அதை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மேலே இன்னொரு டிஷ்யூ பேப்பரை வைத்து விதையை மூடி வைக்கவும். ஐந்து நாட்களுக்குள் விதைகள் முளைக்க செய்திருக்கும். இப்போது வெயில் அதிகம் படாமல் ஓரளவுக்கு வெயில் படும் படியான இடத்தில் வைக்க வேண்டும். முளைவிட்ட பின் மேலே இருக்கும் டிஷ்யூ பேப்பரை எடுத்துக் கொள்ளலாம்.

coriander-growth

10லிருந்து 12 நாட்களுக்குள் கொத்தமல்லி இலை நன்றாக வளர்ந்திருக்கும். இந்த சமயத்தில் அடியில் வைக்கப்பட்ட நீரை புதிதாக மாற்றி விட வேண்டும். அதன் பின் 2 லிருந்து 3 நாட்களுக்குள் அறுவடை செய்யும் அளவிற்கு கொத்தமல்லி வளர்ந்து செழிப்பாக நிற்கும். உரக்கலவையை பயன்படுத்தி கொத்தமல்லி விதைப்பவர்கள் அதனை ஒன்றிரண்டாக நசுக்கி தூவிவிட்டு அதன் மேல் லேசாக அரை இன்ச் அளவிற்கு மண்ணை தூவி விட்டால் போதும். இதே போல் 5 நாட்களுக்குள் முளைவிட்டு 15 நாட்களில் அறுவடை செய்து விடலாம். இடையிடையே ஈரப்பதம் வற்றி விடாமல் தண்ணீர் தெளித்தால் போதுமானது.

- Advertisement -

கொத்தமல்லி, புதினா இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை அதிக நாட்கள் வரை பிரஷ்ஷாக வைத்திருக்க சாதாரண கவரில் வைப்பதை விட திக்கான பிளாஸ்டிக் கவர் அல்லது ஜிப்லாக் கவர்கள் உபயோகப்படுத்தலாம். மொத்தமாக வாங்கி வைப்பவர்கள் நல்ல இலைகளையும், நிறம் மாறி இருக்கின்ற இலைகளையும் தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இலைகள் பிரஷ்ஷாக இருக்கும். நல்ல இலைகளை மட்டும் கவரில் வைத்து காற்றை நீக்கி விட்டு லாக் செய்து கவரை நன்கு மடித்து ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் போதும். பத்து நாட்களுக்கு மேல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். கொத்தமல்லி இலைகளை வேர் நீக்கி வைக்க வேண்டும்.

coriander-chilli-zip-lock-cover

பச்சை மிளகாய் பொறுத்தவரை காம்பு முழுவதுமாக நீக்கி விட்டு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடியில் டிஷ்யூ பேப்பர் வைத்து அதில் சேகரித்து வைத்தாலே போதுமானது. 2 வாரம் வரை கூட அப்படியே இருக்கும்.

- Advertisement -

இஞ்சியை பொறுத்தவரை தண்ணீரில் சிறிதளவு கூட மண்ணில்லாமல் நன்கு கழுவி பின் ஈரப்பதம் சிறிதும் இல்லாமல் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியை வாங்கியவாறே பெரிதாக அப்படியே வைப்பதை விட சிறு சிறு துண்டுகளாக உடைத்து சிறு சிறு நுனிப்பகுதிகளை மட்டும் நீக்கி விட்டு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் டிஷ்யூ பேப்பர் மேல் வைத்து அதன் மேலே இன்னொரு டிஷ்யூ பேப்பரால் மூடி பத்திரப்படுத்தி வைத்தால் எவ்வளவு நாட்களானாலும் அழுகாமல் அப்படியே இருக்கும்.

இதையும் படிக்கலாமே
துருப்பிடித்த தோசைக்கல்லை மொறுமொறுன்னு தோசை சுட்ற அளவுக்கு சூப்பரா எப்படி மாற்றுவது?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -