துருப்பிடித்த தோசைக்கல்லை மொறுமொறுன்னு தோசை சுட்ற அளவுக்கு சூப்பரா எப்படி மாற்றுவது?

dosa-tawa
- Advertisement -

இன்று பெரும்பாலும் இரும்பு தோசை கல்லை விட நான்ஸ்டிக் தவா வாங்கி அதில் மொறுமொறுவென்று தோசை சுடுவது தான் பலரும் விரும்புகின்றனர். ஒட்டாமல் அழகாக அதில் வருவதால் அதிகபட்ச மக்கள் அதை தேர்ந்தெடுத்து வாங்கி உபயோகிக்கின்றனர். ஆனால் உண்மையில் உங்களிடமிருக்கும் தோசை தவா எவ்வளவு மாதம் வருகிறது? என்று சற்று சிந்தித்து பாருங்கள்! வாங்கிய புதிதில் தோசை சுடுவதற்கு ஆசையாக தான் இருக்கும். போகப் போக அதன் குணம் மாறி சரியாக தோசை சுட வருவதில்லை. நாம் எவ்வளவு முறை தான் தோசை தவாவை மாற்றுவது?

nonstick-dosa-tawa

நான்ஸ்டிக் தவாக்கள் வரும் முன்பு நாம் பயன்படுத்திய இரும்பு தோசைக்கல் இன்னும் அப்படியே நம்மிடம் பத்திரமாகவே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். நான்ஸ்டிக் தோசை தவாவை விட இரும்பு தோசைக்கல் எவ்வளவோ மேலானது. அது இப்போது இருக்கும் பலபேருக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.

- Advertisement -

இரும்பு தோசை கல்லில் நீங்கள் எல்லா வகையான தோசைகளையும் சுட்டு எடுக்கலாம். அதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை. எவ்வளவு எண்ணெய் வேண்டுமானாலும் ஊற்றிக் கொள்ளலாம். ஆம்லெட், சப்பாத்தி, கொத்து பரோட்டா என்று எல்லா வகையான டிஸ்களையும் செய்து அசத்தலாம். அதற்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் இல்லை. ஆனால் உங்களிடம் இருக்கும் தோசைக்கல் துருப்பிடித்து ஒரு மூலையில் போட்டு வைத்திருக்கிறீர்களா? அதை மீண்டும் எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? அதற்கான சுலபமான டிப்ஸ் தான் இது.

rusted-tawa

துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் இரும்பு தோசை கல்லை புத்தம் புதிதாக சுலபமாக எப்படி மாற்றலாம்? அதற்கு பெரிதாக எந்த பொருளையும் கடையிலிருந்து நீங்கள் வாங்க கூட தேவையில்லை. வீட்டில் இருக்கும் சாதாரணமான பொருட்களை வைத்தே மாற்றிவிட முடியும்.

- Advertisement -

உங்களின் இரும்பு தோசைக் கல்லை முதலில் சோப் அல்லது சபீனா பயன்படுத்தி நன்றாக ஐந்திலிருந்து ஆறு முறை தேய்த்து கழுவுங்கள். நீங்கள் இவ்வளவு முறை கழுவும் பொழுது அதில் இருக்கும் துருப்பிடித்த கரைகள் ஓரளவு நீங்கிவிடும். அதற்குப் பிறகு அடுப்பை பற்ற வைத்து அடுப்பில் தோசை கல்லை வையுங்கள். ஒரு டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளும், ஒரு டீஸ்பூன் அளவிற்கு தூள் உப்பும் போட்டுக் கொள்ளுங்கள்.

dosaikal

பின்னர் 2 டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி நறநறவென தேய்க்க வேண்டும். இதனை தேய்க்க ஒரு வெங்காயம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மேல் பகுதியையும், கீழ் பகுதியையும் மட்டும் நீக்கிவிட்டு கத்தி அல்லது ஸ்பூன் உடைய பின்பகுதியை குத்திக் கொள்ளுங்கள். இப்போது இந்த வெங்காயத்தை வைத்து நன்றாக நடுப்பகுதியில் இருந்து தோசை கல்லின் நுனி பகுதி வரை அனைத்து இடங்களில் படும்படி தேய்த்து விடுங்கள். ஒரு ஐந்து நிமிடத்திற்கு இப்படியே தேய்த்து விடுங்கள். பின்னர் இதனை அப்படியே விட்டுவிட்டு ஒரு 5 மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.

- Advertisement -

iron-dosa-tawa

நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு இடத்தில் கூட துருப்பிடித்த கரை இல்லாமல் எண்ணெய் பிசுக்கு சேர்ந்த கருமை இல்லாமல் புத்தம் புதிய தோசை கல் போல் ஆகிவிடும். பின்னர் நீங்கள் தோசை ஊற்றுவதற்கு முன் பாதி அளவு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு அனைத்து இடங்களும் படும்படியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் தோசைக்கல் மொழுமொழுவென மாறிவிடும். பின்னர் தோசை வார்த்து பாருங்கள். சும்மா சூப்பரா ஹோட்டலில் சுடுவது போல் மெல்லிய தோசை மொறுமொறுவென்று அருமையாக வெந்து வரும்.

இதையும் படிக்கலாமே
நினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும். நடக்கவே நடக்காதுன்னு சொன்ன ஒரு விஷயத்தை கூட, இந்த பொருள் கிட்ட சொல்லிதா பாருங்களேன்! உடனே நடத்தி தரும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -