ஜாதக கட்டத்தில் இருக்கும் எப்படிப்பட்ட தோஷமும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. சர்வ தோஷத்தையும் அடக்கக் கூடிய சக்தி இந்த 1 மந்திரத்திற்கு உண்டு.

garudan

ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய நாகதோஷம், சனி தோஷம், ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் இப்படிப்பட்ட பல பெரிய தோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. நாம் அறிந்த நமக்கு தெரிந்த தோஷங்களும் தீரும். நாம் அறியாத, நமக்குத் தெரியாத பல வகையான தோஷங்களையும் தீர்த்து வைக்கக் கூடிய சக்தியும் இந்த மந்திரத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. எல்லா தோஷங்களையும் நிவர்த்தி செய்யக்கூடிய சக்தியானது ஒரு மந்திரத்தில் அடங்கி இருக்கிறது என்றால், அந்த மந்திரத்திற்குரிய தெய்வம் எதுவாக இருக்கும்? நம்முடைய கஷ்டங்களை போக்கும் அந்த தெய்வம் எது? அதற்குண்டான மந்திரம் தான் என்ன? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

garuda-bagavan

வேதங்கள் எங்கெல்லாம் ஒலிக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் நிச்சயம் இவரின் தரிசனம் கிடைக்கும். பக்ஷிகளின் ராஜன் என்று அழைக்கப்படும் கருடாழ்வாரின் மந்திரத்தை பற்றித்தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். கும்பாபிஷேகம் நடக்கும் இடங்களில் வேதமந்திரங்கள் முழுங்கும் சமயத்தில், நிச்சயம் அந்த இடத்தில் கருடனை நாம் தரிசிக்க முடியும். உயரத்தில் ஆகாய மார்க்கத்தில் பறந்து, நமக்கெல்லாம் தரிசனத்தை தருவார் அந்த கருடாழ்வார்.

பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை தான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இதேபோல் பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் போது, முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரமும் உண்டு. இது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்பு பெருமாளை தரிசனம் செய்வதுதான் சரியான முறையும் கூட. இனி பெருமாள் கோவில்களுக்கு சென்றால் இந்த முறையை பின்பற்றி கொள்ளுங்கள்.

Garudan

சரி, இப்போது ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷத்தை நீக்கக் கூடிய, சக்தி வாய்ந்த அந்த மந்திரத்தை பற்றி தெரிந்துகொள்ளுவோம். இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் முறையாக உச்சரித்து, அதற்கான பலனை நீங்கள் பெற்று விட்டால், உங்களின் மனபயம் நீங்கும். விஷ ஜந்துக்களால் இருக்கும் ஜாதக தோஷங்கள் நீங்கும். உங்களை அறியாமலேயே, ஒரு சக்தி உங்களுக்குள் வந்து சேரும், என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கான கருடாழ்வார் மந்திரம் இதோ.

- Advertisement -

ஓம் ஸ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய
விஷ்ணு பக்தி பிரியாய
அமிர்த கலச ஹஸ்தாய

பஹு பராக்ரமாய
பக்ஷி ராஜாய சர்வ வக்கிர
சர்வ தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய ஸ்வாஹா

garudan

தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும், தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும். குறிப்பாக இந்த மந்திரத்திற்கு அந்த சக்தி அதிகமாகவே உள்ளது.

Garudan

ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் தீர வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட வேண்டும்.

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டுமென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது.

உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது.

garudazhvar

எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்பவர்களும் கருடாழ்வாரை புதன்கிழமை வழிபடுவது நல்லது.

நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது.

வீட்டில் பணப் பிரச்சனை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும்.

சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.

garuda-bagavan1

இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சங்கடங்களும், சிறு துரும்பாக மாறும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தற்போது ‘ஏழரை சனி’ தொடங்கியுள்ள இந்த ராசிக்கு மட்டும் இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.