தற்போது ‘ஏழரை சனி’ தொடங்கியுள்ள இந்த ராசிக்கு மட்டும் இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

sani-astro

சாதாரணமாக பேச்சு வழக்கில் கூட ‘உனக்கு ஏழரை சனி இருக்கிறது அதனால் தான் நீ இப்படியெல்லாம் பேசுகிறாய்’ என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஏழரை சனி என்றாலே எல்லோருக்கும் ஒருவிதமான கலக்கம் ஏற்படுவது இயல்பானது தான். தற்போது நடைபெற்ற சனிப்பெயர்ச்சி யாருக்கெல்லாம் சாதகம்? யாருக்கெல்லாம் பாதகம்? என்பதைப் பார்த்தோம். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி துவங்கி இருக்கிறது. இவர்களுக்கு இனி வரும் காலத்தில் என்னவெல்லாம் நடக்கும்? அவர்கள் அதிலிருந்து தப்பிப்பது எப்படி? என்ன பரிகாரம் செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

sani-baghavan

செப்டம்பர் 29-ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்த சனிபகவான் கும்ப ராசிக்கு ஏழரைச் சனியாக அமைந்து இருக்கிறார். எனவே கும்ப ராசிக்காரர்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. சனி கொடுத்தால் யார் தடுப்பார்? என்ற சொல்லுக்கு இணங்க அவரைப் போல் கொடுப்பவர்களும் யாருமில்லை! கெடுப்பவர்களும் யாருமில்லை! உங்களுக்கு இனி வரும் காலங்களில் கஷ்டங்களை கொடுத்தாலும், அவருடைய வக்ர காலத்தில் எதிர்பாராத திருப்பங்களும் உருவாக்கி விடுவார்.

உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 12-ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். ஏழரை சனியின் துவக்க காலத்தில் இருப்பதால் விரயங்கள் அதிகமாகக் கொடுக்கும் விரயச் சனியாக இருப்பார். கையில் இருக்கும் பணம் மொத்தமும் காலியாகும். விரயங்கள் இருந்தாலும் அதை சுப விரயமாக மாற்றி அமைப்பதில் உங்களுடைய புத்திசாலித்தனம் இருக்கிறது. விரயசனி விரயங்களை கொடுப்பதால் உங்கள் கையில் இருக்கும் பணத்தை ரொக்கமாக வைத்திருக்காதீர்கள்.

Kumbam Rasi

நீங்கள் கையில் எவ்வளவு சேமிப்பு தொகை வைத்து இருந்தாலும் அதை ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்பு நிதியில் போட்டு விடலாம் அல்லது நிறைய தொகை வைத்திருப்பவர்கள் மனை போன்றவற்றை வாங்கி விடலாம். இது சுப விரயமாக கணக்கில் சேர்ந்து விடும். இல்லையென்றால் உங்கள் கையில் இருக்கும் பணம் வீணாக போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

மேலும் ஏழரை சனியால் தொழில் தொடர்பான விஷயங்களில் அதிக முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அது போல் இடமாற்றம், தொழில் மாற்றம் என்று ஏதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து விட்டு முடிவெடுப்பது மிகவும் நல்லது. புதிதாக எந்த விஷயத்தையும் துவங்காமல் இருப்பது நல்லது. இருப்பதை வழக்கம் போல் செய்து வந்தாலே போதும். எதற்காகவும் யாரையும் நம்பி ஜாமீன் போடுவது, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவது, சொத்து பிரச்சனைகளில் தலையிடுவது போன்ற விஷயங்களை செய்து விடாதீர்கள். திருமணம் நடத்தி வைப்பது, கோவில் காரியங்களுக்கு செலவழிப்பது போன்ற சுப காரியங்கள் செய்யுங்கள்.

Sani Bagavan

நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். உங்களுக்கு பிடிக்காத நிறைய விஷயங்கள் நடைபெறும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். ஆரோக்கிய கோளாறு தொந்தரவுகளை தரும். கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தீய பழக்கங்களில் இருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. உங்களின் தீய பழக்கங்கள் தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும். வாகன ரீதியான பயணங்களில் கூடுதலாக எச்சரிக்கை தேவைப்படும்.

sani bagavaan temple

செய்ய வேண்டிய பரிகாரம்:
என்னடா இப்படி எல்லாம் சொல்லி பயம் கொள்ள வைக்கிறார்களே? என்று யோசிக்க தேவையில்லை. பொதுவாகவே ஏழரை சனி ஆட்டி படைக்கும் என்பார்கள். எனினும் அதற்குரிய பரிகாரங்களை செய்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஏழரை சனியில் சிக்கி தவிக்க இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை அடிக்கடி மேற்கொள்வது நல்லது. அதுபோல் உங்களால் முடிந்தவரை ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். சனிக்கிழமை அன்று காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் சனி ஹோரையில் ஏற்றி வாருங்கள். சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, காக்கைக்கு தினமும் எள் கலந்த சாதம் வைப்பது சனி பாதிப்பை குறைக்க செய்யும்.

இதையும் படிக்கலாமே
நேற்று வக்ர நிவர்த்தி அடைந்த சனி பகவான் எந்த 5 ராசிக்கு இனி அதிர்ஷ்டத்தை அள்ளி தரப்போகிறார் தெரியுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.