- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் சேர குபேரவசிய பரிகாரம்

பணம் சேர குபேரவசிய பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் இப்படி ஒரு ஆசை நிச்சயம் இருக்கும். நம் வீட்டில் இருக்கும் பணம் குட்டி போடாதா, ஒரு பணத்தை பீரோவில் வைத்தால் அந்த பணம் மடங்காக பெருக வேண்டும், பணம் குட்டி போட வேண்டும் என்றால் என்ன செய்வது. ஆனால் யார் வீட்டிலும் பணம் குட்டி போடவில்லை. பணம் தண்ணீராக செலவு தான் ஆகிறது.

நாம் நம்முடைய உழைப்பின் மீது நம்பிக்கையை வைத்து அயராது வேலை செய்தால், நிச்சயமாக நம் வீட்டில் பீரோவில் இருக்கும் பணம் கூட பல மடங்கு பெருகும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உங்களுடைய முன்னேற்றத்தில் வரும் தடைகளை தகர்க்க, குபேரரின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற, தண்ணீராக செலவாகும் பணத்தை, தண்ணீரை வைத்து அணை கட்டி சேமித்து வைக்க, செய்ய வேண்டிய ஒரு குபேர வசிய தண்ணீர் பரிகாரம் இது.

- Advertisement -

குபேரவசிய நீர் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முதலில் மூன்று தீர்த்தங்கள் தேவைப்படுகிறது. தீர்த்தம் என்றால் காசி ராமேஸ்வரம் இப்படித்தான் சென்று தீர்த்தத்தை சேகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுடைய வீட்டில் சின்னதாக அந்த செம்பு பானையில் காசி ராமேஸ்வரம் தீர்த்தம் இருந்தால் அதை பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். இல்லையென்றால் உங்கள் வீட்டில் அருகில் குளம், அருவி இதுபோல இடங்களுக்கு பக்கத்தில் கோவில்கள் இருக்கும். அந்த கோவிலுக்கு சொந்தமான தீர்த்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேகரித்து எடுத்து வர வேண்டும்.

மூன்று கோவில்களில் இருந்து இப்படி தீர்த்தத்தை கொண்டு வந்து ஒரு வெண்கல பாத்திரத்தில் ஊற்றி மூடி பூஜையறையில் வைத்து விட வேண்டும். இந்த தீர்த்தத்தின் மூலம் குபேரரை நீங்கள் வசியம் செய்ய முடியும். எப்படி? பூஜை அறையில் இந்த தீர்த்தத்தை ஒரு பக்கமாக வைத்து விடுங்கள். விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பிறகு பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை சொல்லி அந்த தீர்த்தத்திற்கு ஊதுவத்தி காண்பிக்க வேண்டும்.

- Advertisement -

தினமும் இதை செய்தாலே போதும். 48 நாளில் உங்களுடைய பணப்புழக்கமானது அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கலாம். 48 நாட்களுக்குப் பிறகு வழிபாட்டை மேற்கொள்ள வேண்டாம். ஆனால் அந்த தீர்த்தம் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும். (இந்த தீர்த்தம் தான் உங்கள் வீட்டில் தண்ணீராக செலவாகும் பணத்தை கட்டுப்படுத்த போகிறது).

மூடி வைத்த தீர்த்தம் அவ்வளவு எளிதில் கெட்டுப்போகாது. ஒரு வருடம் அப்படியே இருக்கும். ஒரு வருடம் கழித்து நீங்கள் தீர்த்தத்தை மாற்றி வைக்கலாம். மாற்றி வைத்த பிறகு மீண்டும் 48 நாள் அந்த தீர்த்தத்திற்கு மந்திரத்தை சொல்லி, தீர்த்தத்திற்கு உரு ஏற்றி பூஜையறையில் வைத்தால் உங்களுடைய வீட்டில் பணம் வந்த வண்ணம் இருக்கும். சரி தீர்த்தத்தின் முன்பு சொல்ல வேண்டிய அந்த குபேர மந்திரம் என்ன.

- Advertisement -

குபேர மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் க்லீம் குபேராய வசிய நமஹ !

இதையும் படிக்கலாமே: 20-04-2025 தேய்பிறை அஷ்டமி திதி விளக்கு பரிகாரம்

இவ்வளவுதான் மந்திரம். இந்த மந்திரத்தை தினமும் அந்த தீர்த்தத்தின் முன்பு சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் 27 முறை சொல்லுங்கள். அதிகபட்சம் 108 முறை வரை சொல்லலாம். தவறு கிடையாது. இந்த தீர்த்தத்தில் குபேரரை, இந்த மந்திரத்தை சொல்லி அமர வைத்து விட்டால் உங்களுடைய வீட்டில் பணம் தண்ணீராக செலவாகாது. நிலையாக பணக்கஷ்டம் தீரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்