பூஜை புனஸ்காரங்கள் கூட தேவையில்லை. இந்த ஒரு மந்திரம் போதும் குபேரரின் ஆசிபெற!

kuberan

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் வறுமையை நீக்க குபேரரின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும். குபேரரின் சிலையை மட்டும் நம் வீட்டில் வைத்திருந்தால் போதுமா? பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நினைக்காதீர்களா? உங்களது வீட்டில் சிலையாக இருப்பவரின் குபேரரின் நினைவு உங்களது மனதிலும் இருக்க வேண்டும். அதாவது ஒரு நாள் பொழுதில், குபேரனை நினைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை என்றாலும், இரு கைகளைக் கூப்பி வணங்கி ஒரு சிறிய ஆசீர்வாதத்தையாவது குபேரனிடமிருந்து பெற்று விட வேண்டும். இதுவே ஒரு சிறப்பான முறை. இப்படி குபேரரை வெறும் கைகளில் மட்டும் வணங்காமல், குபேரரை போற்றும் இந்த மந்திரத்தை உச்சரித்து வணங்கும்போது அவரது மனம் மேலும் குளிரும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. குபேரரின் மனதை குளிர வைக்க என்ன மந்திரம் சொல்லி வழிபடுவது? குபேரரின் மனதை குளிர வைக்கும் அந்த மந்திரத்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

kubera

காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு குபேரரின் திருவுருவ படத்திற்கு நமஸ்காரம் செய்து கொண்டு, குபேரர் பொம்மை உருவில் இருந்தாலும் சரி, நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் தான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களது அலமாரியில் இருக்கும் குபேரராக இருந்தாலும், அவரை வணங்கிவிட்டு பின் வரும் இந்த மந்திரத்தை ஒரே ஒரு முறை உச்சரித்து விடுங்கள் போதும். உங்களுக்கான மந்திரம் இதோ.

குபேர மந்திரம்:
ஓம் க்லீம் குபேரா போற்றி
ஓம் க்லீம் ஸ்ரீமத போற்றி
ஓம் க்லீம் பூரணா போற்றி
ஓம் க்லீம் அஸ்வ ஆரூடா போற்றி
ஓம் க்லீம் நரவாகனா போற்றி
ஓம் க்லீம் புட்பக வாகனா போற்றி
ஓம் க்லீம் யட்சேனா போற்றி
ஓம் க்லீம் கட்காயுதா போற்றி
ஓம் க்லீம் நிதி ஈஸ்வரனே போற்றி
ஓம் க்லீம் நித்யானந்தனே போற்றி
ஓம் க்லீம் தனலட்சுமி வாசனே போற்றி
ஓம் க்லீம் சுகாஸ்ரயனே போற்றி
ஓம் க்லீம் மகதைஸ்வர்ய போற்றி
ஓம் க்லீம் சர்வக்ஞனே போற்றி
ஓம் க்லீம் சிவபூஜை பிரியனே போற்றி
ஓம் க்லீம் ராஜயோகம் தருபவனே போற்றி

kuberan

இந்த மந்திரத்தை பார்த்து உச்சரிக்க இரண்டு நிமிடங்கள் கூட ஆகாது. ஆனால் குபேரனை போல ஆக வேண்டும் என்ற மன உற்சாகத்தை தரும் மந்திரம் இது. குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான், இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. உடலும் மனமும் சுத்தமாக இருக்கும் சமயத்தில் காலை அல்லது மாலை வேலையில் தினம்தோறும் ஒரு முறையாவது இந்த மந்திரத்தை உச்சரித்து விடுங்கள். எல்லோருக்கும் குபேரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட, எல்லோராலும் குபேரர் ஆகிவிட முடியாது. நமக்கு வந்து சேர வேண்டிய பணமானது வந்து சேர வேண்டுமென்றாலும், அதற்கான வழிமுறைகளை நாம் தேடிச் சென்று தான் ஆக வேண்டும். உங்களுடைய வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றாலும், பணக்கஷ்டம் தீர வேண்டும் என்றாலும், குபேரரை இந்த மந்திரத்தைச் சொல்லி தொடர்ந்து 48 நாட்கள் வழிபட்டு பாருங்கள். நல்ல தீர்வு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
தொழில் முடக்கமா? என்ன செய்வது? கோடி கணக்கில் லாபம் பெற மகாலட்சுமி மந்திர ரகசியம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kadan prachanai theera Tamil. Kubera manthirangal Tamil. Kubera mantra Tamil. Panam athigam vara Tamil