தொழில் முடக்கமா? என்ன செய்வது? கோடி கணக்கில் லாபம் பெற மகாலட்சுமி மந்திர ரகசியம்.

lakshmi

முதலில் ஒருவர் வசதி படைத்தவராக இருக்க வேண்டும் என்றாலும், கோடீஸ்வரராக மாற வேண்டும் என்றாலும், அவர் செய்யும் தொழிலானது நல்ல லாபத்தை அடைய வேண்டும். நாம் செய்யும் தொழிலை எப்படி அதிக லாபம் கிடைக்கும் ஸ்தாபனமாக மாற்றுவது? என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அதிகமாக பணம் சேர்ப்பவர்கள் என்றால் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், என்று அவர்கள் என்னென்ன வழிகளை எல்லாம் பின்பற்றுகிறார்களோ அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கின்றோம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் வட மாநிலத்தவரின் பரிகாரங்களை மட்டும் நாம் பின்பற்றினால் போதாது. அவர்களுக்கென்று சில பழக்கவழக்கங்கள் உள்ளது. அவற்றை நாமும் பின்பற்றினால் தான், அவர்களுடைய பரிகாரத்தை நாம் செய்யும் போது நமக்கும் நல்ல பலனளிக்கும். புரிந்து கொண்டீர்களா? அது என்ன பழக்க வழக்கம்! என்பதை முதலில் தெரிந்து கொண்டு அதன் பின்பு பரிகாரத்தை செய்வோம்.

cash

வடமாநிலத்தவர்களிடம் அதிகமாக பணம் இருக்கின்றது, என்று தங்கள் உறவினர்களை எந்த நாளிலும் தரக்குறைவாக நடத்தவே மாட்டார்கள். அவர்களுக்கு பணம் என்பது இரண்டாம் பட்சம் தான். முதலில் உறவினர்களுக்கு மதிப்பும் மரியாதையையும் தருவதையே முக்கியத்துவமாக வைத்திருப்பார்கள். தங்களுடைய மாநிலத்திலிருந்து கஷ்டத்தோடு ஒருவர் பிழைப்பு தேடி வருகிறார் என்றால், அவரை கைதூக்கிவிட பத்து வடமாநிலத்தவர் ஒன்றாக சேர்ந்து பணத்தை முதலீடு செய்து புதியதாக தொழிலை, கஷ்டப்படும் குடும்பத்திற்காக ஆரம்பித்து தருவார்களாம். இதுமட்டுமல்லாமல் தங்கள் வீட்டில் வாழும் முதியவர்களை தெய்வமாக பார்ப்பது அவர்களது வழக்கம். பெரியவர்களை கண்டாலே காலில் விழுந்து வணங்காமல் இருக்க மாட்டார்கள். இப்படியாக பணம் படைத்தவர்களாக இருந்துவிட்டால் மனிதர்களின் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம்.

பல கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பொழுது அந்த பணத்தை நாம் மரியாதையாக நடத்த வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக அனாவசியமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். நம் கையில் அதிகமாக பணம் புரளும் போது கணக்கு வழக்கை சரியாக எழுதி வைக்க வேண்டும். மேலும் எப்போது வேண்டும் என்றாலும் பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம். மனிதர்களை சம்பாதிக்க முடியாது. நட்பு வட்டாரத்தை சம்பாதிக்க முடியாது. பணத்தை இழந்தால் கூட நட்பு வட்டாரமும் நம்முடைய உறவினர்களும் நமக்கு கை கொடுப்பார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுவது மிக முக்கியமான ஒன்று.

mahalakshmi

இதற்காக மதிப்பும் மரியாதையும், பணத்தை பாதுகாக்கும் முறையும், வட மாநிலத்தவர்களிடம் மட்டும்தான் உள்ளதா? நம்மிடம் இல்லையா என்று கேள்விகளை எழுப்ப வேண்டாம். நம்மிடம் இருப்பதை விட அவர்களுக்கு ஒரு படி அதிகமாக இருக்கின்றது என்பதை தான் இந்த இடத்தில் கூறப்பட்டுள்ளதே தவிர, நம்மிடம் நல்ல பழக்கவழக்கங்கள் இல்லை என்பது அர்த்தமில்லை.

- Advertisement -

மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருள் இனிப்பு! இனிப்பு! இனிப்பு! இனிப்பு சம்பந்தமான எந்த ஒரு வகையான நெய்வேதியமாக இருந்தாலும், அது மகாலட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு இனிப்பு வகையை மகாலட்சுமிக்கு நெய் வேகமாக படைப்பதை வழக்கமாக வைத்து வரலாம். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு, சுவையான பழ வகைகள், ஏலக்காய் பணமங்கற்கண்டு போட்டு காய்ச்சிய பால், இவைகள் அனைத்தையும் மகாலட்சுமிக்கு வட இந்தியாவில் இருக்கும் வியாபாரிகள் நைவேத்தியமாக படைப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள். தினந்தோறும் இதில் ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைத்தால் போதும்.

mahalakshmi

‘ஓம் ஸ்ரீம் மஹா லக்ஷ்மித் தாயே’ உன்னை மனதார நினைத்து இந்த தீபத்தை ஒளிரச் செய்கின்றேன். என்றவாறு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் எப்படி பிரகாசமாக இருக்கின்றதோ அதேபோல் என்னுடைய வாழ்வும் வளம் பெற வேண்டும், என்று வேண்டி தீபத்தை ஏற்ற வேண்டும்.

அதன்பின்பு காலையில் வியாபாரத்தை தொடங்குவதற்கு முன்பாக இந்த மந்திரத்தை மனதார 11 முறை உச்சரித்து விட்டு உங்களது தொழிலை தொடங்கலாம் மகாலட்சுமியின் மந்திரம் இதோ!

ஸ்ரீசுக்ல மகா சுக்லே நவாங்கே ஸ்ரீமஹாலக்ஷ்மி நமோ நமஹ!

mahalakshmi

ஒரே ஒரு வரி மந்திரம் தான். இதை நீங்கள் படிக்க படிக்க மனப்பாடம் ஆகி விடும். தொழில் செய்யும் இடத்தில், வேலையில்லாமல் இருக்கும் சமயத்தில் மனதார இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தால்கூட எந்த ஒரு தவறும் இல்லை.

இதில் பரிகாரம் என்று பார்த்தால் மிகவும் சுலபமானது தான். ஆனால் அதை நாம் தூய்மையான மனதோடு செய்கின்றோமா? என்பதில்தான் நீங்கள் செய்யும் பரிகாரமானது பலிக்குமா? இல்லையா? என்பது தெரியும். அது உங்கள் கையில் இருக்கிறதே தவிர, பரிகாரம் சொல்பவரது கையில் எதுவும் கிடையாது. தயவுசெய்து சொல்வதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நாம் வைத்திருக்கும் இடத்தின் சுத்தத்தோடு சேர்ந்து, நம் மனதும் சுத்தமாக இருந்தால் தான் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கும் என்பதை புரிந்து கொள்பவர்கள், மன நிம்மதியான கோடீஸ்வரர்களாக இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையான ஒன்று.

இதையும் படிக்கலாமே
நம் குழந்தைகள் எல்லா விஷயத்திலும் படுசுட்டி தான். ஆனால் படிப்பு என்று சொன்னால் மட்டும் ஏன் பின் வாங்குகிறார்கள்?

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi manthiram in Tamil. Mahalakshmi mantras Tamil. Mahalakshmi Mantra Tamil. Mahalakshmi pariharam.