டி20 தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரர் – நியூசி நிர்வாகம் அறிவிப்பு

guptill

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடந்து முடிந்துவிட்டது. இந்த தொடரில் இந்திய அணி (4-1) என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றி வரலாறு படைத்தது. தற்போது உள்ள இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

hitman

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுதினம் துவங்க உள்ளது. இந்த தொடர் துவங்குவதுக்கு முன் நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் விலகுகிறார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி அதிரடி வீரரான மார்ட்டின் குப்தில் அணியில் இருந்து காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாகவும், சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்றும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதோ அந்த இணைப்பு :

மேலும், இந்திய அணிக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் அணியில் இணைந்த ஜிம்மி நீசம் அணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே :

மே.இ தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது – ஐ.சி.சி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்