மே.இ தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது – ஐ.சி.சி

holder

இங்கிலாந்து அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டியில் 381 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆன்டிகுவா நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான கீமார் ரோச் ஆட்டநாயகன் விருதினை தட்டிச்சென்றார்.

இதனால், 2-0 என்ற கணக்கில் மே.இ தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது. இந்த இரண்டாவது போட்டியில் பந்துவீச அதிக எடுத்துக்கொண்டதால் மே.இ தீவுகள் அணியின் கேப்டனான ஜேசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் வரியம்.

jason 1

இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஹோல்டர் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதிலாக பிராத்வெயிட் கேப்டனாக செயல்படுவார் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதையும் படிக்கலாமே :

அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற நியூசி அதிரடி வீரர். பயிற்சியாளராக விருப்பம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்