ஆட்டநாயகன் விருது பெற்ற குப்திலை பரிசளிப்பின் போது பேட்டி எடுத்த அவரது மனைவி. கலகலவென வாய் விட்டு சிரித்த குப்தில் – வைரல் வீடியோ

guptill

இந்திய அணியுடனான தொடரை (4-1) என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலந்துகொண்டு ஆடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்றது.

Nz vs Ban

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வங்கதேச அணி. முதலில் ஆடிய வங்கதேச அணி மிதுனின் அரைசதம் மூலம் வங்கதேச அணி ஒரு சராசரியான ஸ்கோரை 232 குவித்தது. பிறகு ஆடிய நியூசிலாந்து அணி எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துவக்க ஆட்டக்காரர் குப்தில் ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பிறகு ஆட்டநாயகன் விருது பெற பரிசளிப்பு மேடைக்கு வந்தார் குப்தில். அப்போது அவரை பேட்டி எடுக்க அவரது மனைவி வந்து போட்டியில் நீங்கள் சிறப்பாக விளையாட காரணம் என்ன என்று கேட்டார். உடனே சிறிது நேரம் பதிலளித்து விட்டு சிரிக்க ஆரம்பித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

பிரபல வீரர்களின் மனைவிகள் கிரியேட் வர்ணனையாளராக இருப்பது கிரிக்கெட் உலகில் சாதாரணம் தான். இந்திய அணியின் வீரர் பின்னியின் மனைவியும் ஒரு பிரபலமான கிரிக்கெட் வர்ணனையாளர் ஆவார். மாயந்தி லாங்கர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இதுவே எங்கள் இலக்கு :என்னாலும் இவராலும் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடமுடியும். நாங்கள் முதிர்ச்சி அடைந்து விட்டதாக கருதுகிறேன் – ஷிகார் தவான்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்