நியூசி வெயிலில் தொடர்ச்சியாக 10 ஓவர்கள் கலைப்பாகாமல் தொடர்ந்து வீசிய வீரரை பாராட்டிய – குப்தில்

guptill

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 பேட்டிங் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.

அந்த 93 ரன்கள் இலக்கினை நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் எளிதாக எட்டியது . அந்த அணியின் ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 37 ரன்களை குவித்தார், டெய்லர் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான போல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும், ஆட்டநாயகன் விருதினையும் தட்டி சென்றார்.

இதுகுறித்து பேசிய குப்தில் : இந்த வெற்றி ஞாலத்து அணிக்கு தேவையான நேரத்தில் வந்துள்ளது. தொடர் தோல்விகளால் நெருக்கத்தில் இருந்த எங்களது அணிக்கு இந்த வெற்றி நல்ல ஆறுதல். மேலும், எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் இன்று சிறப்பாக பந்து வீசினர். அதிலும் குறிப்பாக 10 ஓவர்களை இந்த வெயிலில் தொடர்ந்து களைப்பின்றி உற்சாகமாக வீசி இந்திய அணியை சாய்த்த போல்ட் எங்கள் அணிக்கு பெருமை சேர்த்திருக்கிறார் என்று நெகிழ்ந்தார்.

trent

இந்த போட்டியில் மொத்தம் 10 ஓவர்களையும் தொடர்ந்து வீசிய போல்ட் 4 மெய்டன் ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

கிரிக்கெட் வரலாற்றிலே இது தான் முதல்முறை . அபாரமான சாதனைக்கு சொந்தமான நியூசிலாந்து அணி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்