‘குரு பார்க்க கோடி நன்மை’ குருவருள் பெற ‘குரு பகவான்’ படத்தை வீட்டில் இப்படி தான் வைத்திருக்க வேண்டும்? குருவும், தட்சிணாமூர்த்தியும் வெவ்வேறா?

Guru-1

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பது ஜோதிட பழமொழி ஆகும். குரு பகவான் எந்த ராசியில் அமர்ந்து இருந்தாலும் அந்த ராசி யோகம் பெற்ற ராசியாக கூறப்படுகிறது. ஆனால் அதை விட அவர் அங்கிருந்து எந்த ராசியை பார்வையிடுகிறார்? என்பதைப் பொறுத்து தான் அதீதமான பலன்களும் உண்டு. குரு இருக்கும் ராசியை விட, அவருடைய பார்வை அமையும் ராசி அதிர்ஷ்ட ராசியாக ஜோதிடத்தில் கூறப்படும். அவரின் பார்வை பலம் நம்மை குப்பையில் இருந்து கூட, கோபுரத்திற்கு திடீரென கொண்டு சென்றுவிடும். ஒருவருக்கு திருமண யோகம் கைகூடி வர குரு பலன் இருக்கிறதா? என்பது தான் ஜோதிடர்கள் பார்ப்பார்கள்.

guru-bhagavan

குரு யோகம் இருந்தால் தான் சுபயோகம் ஒரு மனிதனுக்கு கைகூடிவரும். அத்தகைய குருவருள் பெற கோவிலுக்கு தான் செல்ல வேண்டுமா? குருபகவானை வீட்டில் வைத்து வழிபட கூடாதா? அப்படி வழிபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? எப்படியான குருவின் படத்தை வீட்டில் வைத்து இருப்பது யோகம் தரும்? குருவும், தட்சிணாமூர்த்தியும் வெவ்வேறா? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

குரு பெயர்ச்சியின் பொழுது தட்சிணாமூர்த்திக்கு குரு வழிபாடு செய்வது வழக்கம். உண்மையில் குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒருவரா? இல்லை வேறு வேறு கடவுள்களா? என்கிற குழப்பம் பக்தர்களுக்கு உண்டு. தட்சிணா மூர்த்தியும் குரு பகவானும் ஒருவரல்ல என்பது தான் உண்மை. நவகிரக சந்நிதியில் வீற்றிருக்கும் குரு பகவானுக்கு உரிய திசை ‘வடக்கு’ ஆகும். ஆனால் தட்சிணாமூர்த்தியோ தென்முகக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஆகவே இதிலிருந்து இருவரும் வெவ்வேறானவர்கள் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. இருவரும் ஒருவரே என்பதற்கு எந்தவிதமான புராண குறிப்புகளும், சான்றுகளும் இல்லை.

dhatchinamoorthi

தட்சிணாமூர்த்தி என்பவர் சிவனின் அம்சமாக விளங்குபவர். சிவபெருமான் தன்னுடைய சனகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களை பயிற்றுவிக்க குருவாக திரு உருவம் பெற்று உபதேசிப்பதற்காக கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து ஆதி குரு, ஞான குருவாக காட்சியளிக்கின்றார். இவர் வெண்பட்டு உடுத்தி இருக்கிறார். இவரை வணங்குவதற்கு தியானத்தில் ஈடுபட்டால் மட்டுமே போதும். ஞானம் பெற தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை உச்சரித்தபடி தியான நிலையில் இருப்பது பெரும் பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

பக்தர்கள் இனியும் குரு பெயர்ச்சியின் பொழுது உண்மையான குருபகவானை விட்டு விட்டு, ஞானம் தரும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றுவது, மஞ்சள் நிற கொண்டைக்கடலை மாலை அணிவிப்பதும் செய்வது வீண் என்று உணர்வது நன்மை. குரு பகவானுக்கு இவற்றை செய்து பக்தர்கள் குருவருள் பெற்றுக் கொள்ளலாம். வீட்டில் குரு பகவான் வழிபாடு செய்வதற்கு குரு பகவானுடைய படத்தில் ஒரு காலை மட்டும் மடித்து வைத்திருப்பதாக அமைந்திருக்கும் அற்புதமான படத்தை வைத்திருப்பது மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

guru

குரு பகவானை ஸ்லோகம்:
தேனாம்ச ரிஷனாம்ச,
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேஸம்,
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!

guru-bagavan

குரு பகவானை வீட்டில் வழிபட நினைப்பவர்கள் வியாழன் கிழமை அன்று குருபகவான் படத்திற்கு சந்தனம், குங்குமமிட்டு கொண்டைக் கடலை மாலை அணிவித்துக் கொள்ளுங்கள். அவற்றை தானமாக கொடுக்கவும் நெய்வேத்தியம் வையுங்கள். மேலும் மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை கூறி, தியான நிலையில் அமர்ந்து பெரிய மண் அகல் விளக்கு ஒன்றை வைத்து, அதில் 16 திரி இட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு முறையாக செய்ய திருமணம் ஆகாதவர்களுக்கு உடனே திருமணம் கைகூடி வரும். குரு பகவான் கொடுக்கும் அத்தனை பலன்களும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.