குருபகவானின் அனுக்கிரகத்தை முழுமையாக பெற என்ன தானம் செய்ய வேண்டும்?

Guru-1
- Advertisement -

குரு பார்த்தால் கோடி நன்மை என்பது நாம் எல்லோரும் அறிந்ததே! இப்படிப்பட்ட குருபகவான் ஜாதகத்தில் நீச்சம் அடைந்து இருந்தால், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். குறிப்பாக மாணவர்களுக்கு ஜாதகத்தில் குரு நீச்சம் அடைந்து இருந்தால், அவர்களது படிப்பு மந்தமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கூடத்திலும், ஆசிரியர்கள் இடத்திலும் பலவிதமான சேட்டைகளை செய்ய தொடங்கி விடுவார்கள். மாணவப்பருவத்தில், குரு நீச்சம் அடைந்தால் அவர்களது வாழ்க்கையின், திசை தடுமாறி போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

guru-bhagavan

எடுத்துக்காட்டாக ஆசிரியர்களை எதிர்த்து பேசுவது, ஆசிரியர்களுடைய பொருட்களை சேதம் செய்வது, புரோகிரஸ் கார்டில் அவர்களே, அப்பாவின் கையெழுத்தை போட்டுக்கொள்வது, இப்படிப் பலவிதமான சேட்டைகளை செய்து வருவார்கள். சக மாணவர்களோடு சண்டை போடுவது. ஆனால் அவர்கள் செய்யும் இந்த சின்ன சின்ன தவறுகளின் மூலமாக அவர்களுடைய படிப்பும் பாதிக்கப்படும் என்பது அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் அறியாத வயசு! இதற்கான பரிகாரத்தை பெற்றோர்கள் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால், பெற்றோர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த பரிகாரம் என்று இல்லை, குரு நீச்சம் அடைவதால், பெரியவர்களுக்கும் பிரச்சனை வரும். பெரியவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். கோவில்களுக்கு உங்களால் முடிந்த பூஜை பொருட்களை தானமாக வழங்கலாம். வசதி படைத்தவர்களாக இருந்தால், கோவிலில் சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்யலாம். இல்லையென்றால் கோவிலுக்கு பயன்படுத்தப்படும், தூப கலசம், மணி, அல்லது கோவிலில் பல்ப் ஃப்யூஸ் போய்விட்டால், அதை கூட புதியதாக மாற்றி கொடுக்கலாம். ஒரு டியூப் லைட் வாங்கி கொடுப்பதற்கு அவ்வளவு பெரிய செலவு ஒன்றும் ஆகாது. அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்கு, தண்ணீர் ஊற்ற, சிறிய பித்தளை சொம்பு வாங்கி கொடுத்தால் கூட அது நன்மை தரும்.

temple-bell

கோவிலுக்கு தேவைப்படும் மஞ்சள், குங்குமம் விளக்கேற்றும் எண்ணெய், கற்பூரம், ஊதுபத்தி இப்படி சின்ன சின்ன பொருட்களை வாங்கிக் கொடுப்பது மூலம் கூட குருபகவான் அனுகிரகத்தை நம்மால் முழுமையாக பெற முடியும். வியாழக்கிழமை தோறும் உங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு குருபகவான் சன்னதிக்கு சென்று, கொண்டைக்கடலை மாலை சாத்தி முல்லைப் பூவால் அர்ச்சனை செய்து வருவது நல்ல பலனைக் கொடுக்கும். கொண்டைக் கடலை சுண்டல் செய்து, குழந்தைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

- Advertisement -

ஒரு வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, மஞ்சள்நிற நெய்வேத்தியம் செய்து, பிரசாதமாக எல்லோருக்கும் கொடுக்கலாம். சிலபேருக்கு குரு பலன் வந்தால் கூட திருமணம் அமையாமல் தள்ளிக்கொண்டே போகும். இப்படிப்பட்ட திருமண தோஷம் ஏதேனும் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால், திருமண கோலத்தில் இருக்கும் சுவாமி படங்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

ramar-setha

ராதை கிருஷ்ணர், ராமர் சீதை, பெருமாள் லட்சுமி தேவி, மீனாட்சி சொக்கநாதர், சிவன் பார்வதி, இப்படி தம்பதி சரீரமாக இருக்கும் கடவுள்களின் திருவுருவ படத்தை, குறிப்பாக மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது மிகவும் நல்லது. தானமாகப் பெற்றவர்கள், அதை அவர்களது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வர வர, தானமாக கொடுத்தவரின் கஷ்டம் தீரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

sivan

பொதுவாகவே தோஷம் இருந்தாலும் சரி, தோஷம் இல்லை என்றாலும் சரி. உங்களால் முடிந்தால் சுவாமியின் திருவுருவப் படத்தை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. அதனால் நன்மைதான். சில பேரின் வீட்டு கல்யாண விசேஷங்களில், வருகை தருபவர்களுக்கு, அன்பளிப்பாக இப்படி தெய்வங்களின் திருவுருவப் படத்தை கொடுப்பதற்கு காரணமும் இதுதான். ஆகவே, உங்களால் முடிந்தவரை சுவாமி சிலைகள், சுவாமியின் திருவுருவப் படங்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது மிகவும் நல்ல பழக்கம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் பிறந்த தேதிக்கு, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வேர் எது? நீங்கள் பண மழையில் நனைய, இந்த ஒரு வேர், உங்கள் கையில் இருந்தால் போதும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -