- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval21 நாட்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர குரு தோஷத்தில் இருந்து விடுபட்டு, குருவின்...

21 நாட்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர குரு தோஷத்தில் இருந்து விடுபட்டு, குருவின் அருளைப் பெற்று, பொன் பொருள் பெருகி, வாழ்க்கை சிறந்திடும்

- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் பார்வை இருந்தது என்றால் அவரின் வாழ்க்கையில் தொட்டது எல்லாம் சிறப்பாகவே நடைபெறும். செய்யத் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். பொன், பொருள், செல்வம் என அவர் நினைக்கும் அனைத்துமே அவரைத் தேடி வரும். அப்படி ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் பார்வை சரியாக இல்லை என்றாலும், குரு ஒருவருடைய ஜாதக கட்டத்தில் இல்லை என்றாலும் தொடர்ந்து பிரச்சனைகள் மட்டுமே உருவாகிக்கொண்டிருக்கும். எவ்வித செயல்களை செய்தாலும் அவை தடைபட்டுக் கொண்டே இருக்கும். மனநிறைவு என்பதே இருக்காது. குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவுகள் வந்து கொண்டிருக்கும். பண இழப்பு ஏற்படும். எனவே குரு தோஷத்திலிருந்து விடுபடவும், குருவின் அருளைப் பெறுவதற்கும் இந்த சிறப்பு பரிகாரத்தை மட்டும் செய்து வந்தால் போதும். இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash

ஜாதகத்தில் குரு வலிமை பொருந்தியவராக இருந்தால் குரு அந்த மனிதரை கோடிஸ்வரராகவும் மாற்றிவிடுவார். ஒருவருடைய ஜாதகத்தில் இவர் நல்ல அமைப்பில் அமர்ந்து குரு திசையும் நடக்குமேயானால் அவர் அளவுக்கு அதிகமான பணத்தை சம்பாதிப்பார். ஜோதிடத்தின்படி சுபகிரகங்களின் வரிசையில் குரு, சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் குறிப்பிடப்படுகின்றன.

- Advertisement -

இந்த நான்கு கிரகங்களில் நற்பலன்களை தருவதில் முதல் கிரகமாக பார்க்கப்படுபவர் குரு பகவான் ஆவார். தன காரகன், புத்திரகாரகன் என்று அழைக்கப்படும் இவர் ஒருவருடைய பணத்திற்கும், குழந்தையின் உடல் நலத்திற்கும் காரணமாக அமைகிறார். ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது வம்ச விருத்தியாகும். இதற்கு ஆதாரமாக அமைகின்ற கிரகம் குரு கிரகம் ஆகும். இதன் அடிப்படையில்தான் குருபகவான் முதன்மையானவராக பார்க்கப்படுகிறார்.

chandra-graham1

ஒருவருடைய ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் வலுவிழந்து இருந்தாலும் குரு மட்டும் வலுவிழக்கக் கூடாது என்பது ஒரு மறைமுக விதியாகும். எனவே குரு தோஷம் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் குருவின் அருளைப் பெற்று வாழ்வில் வளம் பெற முடியும். அதற்காக வியாழக்கிழமை தோறும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையை குரு பகவான் கோவிலுக்கு வாங்கிச் சென்று அல்லது நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானின் பாதங்களில் வைத்து உங்களது பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அதனை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலை ஒரு செம்பு அல்லது பித்தளை சொம்பில் முழுவதும் தண்ணீர் நிரப்பிக் கொண்டு, அதனுள் இந்த கடலைகளை போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். அந்த சொம்பின் மீது கைகளை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

Kondai Kadalai

“ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
ஓம் குருதேவாய வித்மஹே
பிரம்மாணந்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்”

thulasi theertham

பிறகு பூஜை முடிந்ததும் அதிலிருக்கும் தண்ணீரை வீடு முழுவதும், வீட்டில் உள்ள அனைவரின் மீதும் தளித்துவிட வேண்டும். மீதமுள்ள தண்ணீரை செடிகளிலோ அல்லது கால் படாத இடத்திலோ ஊற்றி விட வேண்டும். அதிலிருக்கும் கொண்டைக்கடலையை ஒரு வெள்ளைத்துணியில் மடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த கொண்டைக்கடலையை வைத்து இந்த பூஜையை தினமும் 21 நாட்கள் செய்துவர வேண்டும். மறு வாரம் வியாழக்கிழமை புதியதாக கொண்டைக்கடலையை குரு பகவான் பாதத்தில் வைத்து எடுத்து வரும் வரை இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு இதனை செடிகளிலோ அல்லது கால் படாத இடத்திலோ போட்டு விடலாம்.

சற்று முன்