குரு பெயர்ச்சி பலன்கள் 2019 சிம்மம்

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்)

Leo zodiac sign

வெற்றியையும், தோல்வியையும் சமமாக பார்க்கும் சிம்ம ராசிக்காரர்களே வரவிருக்கும் குரு பெயர்ச்சியானது உங்களுக்கு என்னென்ன நன்மைகளை செய்யப் போகிறது என்று பார்ப்போம்.

நீங்கள் யாருக்காகவும் உங்களின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை மாற்றி கொள்ளமாட்டீர்கள். உங்களுக்கு இந்த குரு பெயர்சியானது புதிய உற்சாகம் கொடுப்பதுடன் பல நல்ல வழிகளை தேர்ந்தெடுக்க உதவிகரமாக இருக்கும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நன்மை தரும்.

இதுவரை உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் இருந்து கொண்டு வீண் செலவுகளை தந்து கொண்டிருந்த குரு அங்கிருந்து 5ஆம் வீட்டிற்கு செல்வதால் குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் உயரும். சுப காரியங்களால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இனி வரும் காலங்களில் தம்பதியருக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் வீண் போகாது.

Guru peyarchi palangal Simmam
Guru peyarchi palangal Simmam

சிம்ம ராசிக்கு 9ஆம் வீட்டை குரு பார்ப்பதால் குடும்பத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். நேர்மறையாக சிந்திக்க பழகி கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

பொருளாதாரம்:
பூரம், உத்திரம் 1ஆம் பாதம் உடையோர் இந்த குரு பெயர்ச்சியால் பொருளாதாரத்தில் ஓரளவு நல்ல பலன்களையே பெறுவீர்கள். புது மனை வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

மகம் நட்சத்திரக்காரர்கள் அவசரப்படாமல் எதிலும் நிதானமாக செயலாற்றுவது நல்லது. ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயலாற்றுவது நல்லது. எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். அதனால் எதிலும் முன்னேற்றம் காண்பீர்கள்.

duru sisyan

பெண்களுக்கு இதுவரை தடைப்பட்டிருந்த திருமண முயற்சிகள் விரைவில் கைகூடும். நல்ல வரன் அமையும். தவமிருந்து காத்திருந்தவர்களுக்கு பிள்ளைப்பேறு கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் இந்த குரு பெயர்ச்சியால் புகழின் உச்சிக்கு செல்வார்கள். சாதனைகள் பல புரிந்து விருதுகள் வாங்குவார்கள்.

தொழில்:
இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் துவங்க திட்டமிடுவீர்கள். இதுவரை போட்ட லாபத்தை எப்படி எடுப்பது என்று புலம்பி கொண்டிருந்த நீங்கள் இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு அதிக லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக பயணம் மேற்கொள்ள நேரிடலாம். புதிய முயற்சிகள் மேற்கொண்டால் வெற்றி பெறுவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கும்.

Guru peyarchi palangal Simmam
Guru peyarchi palangal Simmam

கல்வி:
கல்வி கற்கும் மாணவ, மாணவியர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று நீங்கள் நினைத்தபடி உயர் கல்வியில் சேர வாய்ப்புகள் வந்து சேரும்.

ஜாக்கிரதையாக இருக்கவேண்டியவை:
பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் அதனால் மன உளைச்சல் ஏற்படலாம். யோகா, தியானம் போன்றவற்றை கடைப்பிப்பது நல்லது. மகம், உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு கொண்ட முயற்சிகள் எல்லாம் சற்று தாமதமாக தான் நிறைவேறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் எதிர்ப்புகள் அதிகரிக்கும் அதனால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது நல்லது. அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்குவது சிறந்தது.