குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – மகரம்

guru-peyarchi-palan-magaram

மகரம் ராசி: (உத்திராடம் 1, 2, 3ஆம் பாதம், திருவோணம் அவிட்டம் 1, 2ஆம் பாதம்)
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் மகர ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Magaram rasi

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான உங்கள் ராசியில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். மகர ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசியில் இருந்து கொண்டு 5, 7, 9 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே மகர ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது சிறப்பான நல்ல பலன்களே கொடுக்க இருக்கிறது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற சிறப்பான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்களுடைய பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்து சாதகமான முடிவுகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சமூகத்தின் மீதான உங்களின் அக்கறை அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பல நல்லவர்களின் நட்பு உங்களை ஒருபடி முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும். உங்களின் அனுசரணையான கவனிப்பு குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும். உங்களுடைய எதிரிகள் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்ள ஏதுவான காலம் இது. ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் ஏற்றம் இருக்கும்.

உத்தியோகம் மற்றும் தொழில்:
உத்தியோகத்தை பொறுத்தவரை மகர ராசிக்காரர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை சாதக பலன்களை கொடுக்கும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முக்கிய முடிவுகள் சுயமாக எடுப்பதன் மூலம் வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படும். அடுத்தவர்களை நம்பி நீங்கள் ஒப்படைக்கும் காரியத்தில் சற்று எச்சரிக்கை தேவை. வியாபார ரீதியான போட்டிகள் ஆரோக்கியமான போட்டியாக அமையக்கூடும்.

Guru peyarchi palangal Magaram
Guru peyarchi palangal Magaram

பொருளாதாரம்:
உங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் வெற்றி தரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விட முடியும். நிதி சார்ந்த விஷயங்களில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களை மட்டும் உடன் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

குடும்ப வாழ்க்கை:
குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும் வகையில் அமையும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பெண்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய காலமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். குடும்ப விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். குரு பெயர்ச்சிக்கு பிறகு குடும்பத்தில் சில எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும்.

- Advertisement -
Guru peyarchi palangal Magaram
Guru peyarchi palangal Magaram

ஆரோக்கியம்:
வயதுக்கு ஏற்ப உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் படியாக நீங்கி விடும். ஆரோக்கியத்தின் மேல் நீங்கள் செலுத்தும் அக்கறை நல்ல பலன்களைக் கொடுக்கும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பதன் மூலம் மனதிற்கு அமைதி உண்டாகும். இதனால் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

guru-bhagavan

செய்ய வேண்டிய பரிகாரம்:
விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன்களை கொடுக்கும். மகர ராசியை பொறுத்தவரை இந்த குருபெயர்ச்சியில் உங்களால் முடிந்தவர்களுக்கு கோதுமை தானம் செய்து வர சிறப்பான பலன்கள் உண்டாகும். பசுக்களுக்கு வாழைப்பழம் கொடுத்து வர நன்மைகள் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – தனுசு

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.