குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – தனுசு

guru-peyarchi-palan-dhanusu

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Dhanusu Rasi

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்தில் இருந்து கொண்டு 6, 8, 10 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே தனுசு ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது சொத்து ரீதியான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வருமானம் பெருகி செல்வ சேர்க்கை உண்டாவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். கடின முயற்சி மற்றும் நேர்மையான குணம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழி கோலாக அமையும். உங்களுடைய தொடர் முயற்சிகள் பணி சுமையை ஏற்படுத்தும் என்பதால் எப்போதும் ஒருவித மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

உத்தியோகம் மற்றும் தொழில்:
தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் குறையும். உங்களுடைய முன்னேற்றத்திற்கு உங்களுடைய குடும்பத்தார் ஆதரவாக இருப்பார்கள். எனினும் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய புதிய விஷயங்களை உட்புகுத்துவதன் மூலம் நல்ல பல மாற்றங்களை உணர முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களை பொறுத்தவரை உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதனால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை சாதக பலன் தரும்.

Guru peyarchi palangal Dhanusu
Guru peyarchi palangal Dhanusu

பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு தனுசு ராசிக்காரர்களுக்கு ஓரளவு சுமாரான பலன்களே கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பானவற்றில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது மிகவும் நல்லது. பொருளாதார ரீதியான சிக்கல்களை சமாளிக்க கடன் வாங்க நேரலாம். அசையும், அசையா சொத்துக்கள் வாயிலாக வீண்விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. பண விஷயத்தில் திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலகட்டமாக அமைய இருக்கிறது. சிக்கனத்தின் பெருமைகளை உணர்வீர்கள்.

குடும்ப வாழ்க்கை:
குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் தேவையான நேரத்தில் நண்பர்கள் தான் உதவுவார்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ளும் நேரம் கைகூடிவரும். வருகின்ற குரு பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தில் இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் நீங்கி நல்ல ஒற்றுமை மேம்படும். கணவன் மனைவி உறவுக்கு இடையே தேவையற்ற நபர்களை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக் கொள்வது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

- Advertisement -
Guru peyarchi palangal Dhanusu
Guru peyarchi palangal Dhanusu

ஆரோக்கியம்:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்களை தரும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் படிப்படியாக நீங்கும். முதுகு தண்டுவடம், எலும்பு போன்ற தொந்தரவுகள் நீங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாடு விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். தினமும் யோகா தியானம் போன்ற ஏதாவது ஒன்றை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கும்.

guru

செய்ய வேண்டிய பரிகாரம்:
தனுசு ராசிக்காரர்கள் விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்ள நல்லது நடக்கும். அன்பே கடவுள் என்பதை உணர்ந்து நடந்தால் வெற்றி நிச்சயம். வியாழன் கிழமை அன்று குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க யோகம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – விருச்சிகம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.