குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 மேஷம்

guru-peyarchi

சாதுர்யமாகப் பேசி சாதிப்பவர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். உடல் நலம் சீராகும். தடைப்பட்ட காரியங்களையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். வி.ஐ.பி.-க்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். பணவரவும் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.

mesham

 

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் லாப வீட்டைப் பார்ப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

- Advertisement -

7-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மகளின் திருமணம் சிறப்பாக நடைபெறும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.

9-ம் பார்வையால் 3-ம் இடத்தைப் பார்ப்பதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

guru

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசியாதிபதியும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் பயணங்களும் இருந்துகொண்டே இருக்கும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால், மனதில் இனம் தெரியாத கவலை ஏற்படும். கணவன் – மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும். பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய குருபகவான், தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 4.7.18 வரை சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆனாலும், அவ்வப்போது தூக்கம் குறையும். பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை முடித்து கிரகபிரவேசம் செய்வீர்கள்.

guru

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் ராசிக்கு 8-ம் இடத்தில் செல்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். வேலைச் சுமையால் மனதில் சோர்வு ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மனதில் அவ்வப்போது இறுக்கம் உண்டாகும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால் வீண் பிரச்னை, வழக்கால் நிம்மதியின்மை வந்து செல்லும்.

வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கும் சந்தை நிலவரத்துக்கும் ஏற்ப முதலீடு செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். அனுபவம் மிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். மருந்து, பெட்ரோகெமிக்கல், ஸ்பெக்குலேஷன், கட்டட உதிரி பாகங்கள், போர்டிங் – லாட்ஜிங், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரி ஆதரவாக இருப்பார். சக ஊழியர்களும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆளுமைத் திறனும் நிர்வாகத் திறனும் பாராட்டப்படும்.

guru

மாணவ மாணவியர் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். நினைவாற்றல் கூடும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறுவீர்கள். விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள். உங்களுடைய தனித் திறமையை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளால் புகழ் அடைவீர்கள். விருதுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். வரவேண்டிய சம்பள பாக்கி வந்து சேரும்.

இந்த குரு பெயர்ச்சி பட்டுப்போன உங்கள் வாழ்க்கையைப் பசுமையாக மாற்றி, எங்கும் புகழைப் பெற்றுத் தரும்.

பரிகாரம்: திருவாதிரை நட்சத்திரத்தன்று மயிலாடுதுறைக்குச் சென்று, ஸ்ரீவதாரண்யேஸ்வரர் கோயிலில் அருளும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்; தேவைகள் பூர்த்தியாகும்.