குரு பெயர்ச்சி பலன்கள் 2019 விருச்சிகம்

விருச்சிகம் ராசி: ( விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை )

Scorpius zodiac sign

பார்த்தவுடன் எவரையும் கணித்துவிடும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் மகிழ்ச்சிக்கு என்றும் குறைவிருக்காது. 29.10.2019 முதல் 13.11.2020 வரை தன் சொந்த வீடான 2ஆம் வீட்டிற்க்கு குரு செல்வதால் எதிர்பார்த்தபடி தன வரவு வந்து சேரும். குடும்ப ஸ்தானத்திற்கு வருவதால் இனி மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.

பிரிந்து சென்ற உறவினர்கள் தாமாகவே முன்வந்து பேச ஆரம்பிப்பார்கள். ஆரோக்கியம் சீராகி உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுவரை இல்லாத புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மனைவி வழியில் மரியாதை அதிகரிக்கும். வேலைக்கு காத்திருந்தவர்களின் முயற்சிகள் வீண் போகாது.

பல காலமாக திட்டமிட்டிருந்த திருத்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளுக்கு திருமண யோகம் உண்டாகும். நல்ல உத்தியோகம் கிடைக்கும். பெண்களுக்கு திருமண யோகம் கூடிய விரைவில் கைகூடும்.

Guru peyarchi palangal Viruchigam
Guru peyarchi palangal Viruchigam

உங்களின் முன்னேற்றத்துக்கான நபரொருவரை எதிர்பார்க்காத நேரத்தில் சந்திப்பீர்கள் அதனால் மகிழ்ச்சியில் திளைத்து போவீர்கள். நண்பர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் எனவே அவர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது. வீண் வாக்குவாதம் தவிர்ப்பதால் பல பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

- Advertisement -

பொருளாதாரம்:
கடன் தொல்லையிலிருந்து நீங்கி நிம்மதி அடைவீர்கள். இந்த குரு பெயர்ச்சியால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாடு செல்லும் யோகம் உண்டாகும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பதவி உயர்வு கிட்டும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கையின் யதார்த்தங்களை அறிந்துகொள்வீர்கள். உங்களை ஏமாற்றியவர்கள் தாமாகவே முன்வந்து மன்னிப்பு கோருவர்.

தொழில்:
உத்தியோகத்தில் பல காலமாக ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபமடைவீர்கள். உங்களின் வருமானம் இனி இரு மடங்காகும். சிலர் மொத்த வியாபாரத்திற்கு மாறி அதிக லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த நேரத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு வந்து சேரும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலை பளுவால் மன சோர்வு ஏற்படலாம்.

Guru peyarchi palangal Virichigam
Guru peyarchi palangal Virichigam

கல்வி:
கல்வி கற்பவர்களுக்கு நினைவாற்றல் கூடி கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். நண்பர்களே பாராட்டும்படி கூடுதல் மதிப்பெண்கள் எடுத்து முன்னேறி செல்வார்கள். நீங்கள் கவனத்தை சிதரவிடாமல் முழு முயற்சியோடு படிப்பது நல்லது. வேலைக்காக நடைபெற்ற தேர்வுகளில் தேர்வாகி எதிர்பார்த்த வேலை எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். தடைபட்டிருந்த படைப்புகள் வெளியாகும். விரைவில் மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். தனவரவுகள் திருப்திகரமாக அமையும்.

ஜாக்கிரதையாக இருக்கவேண்டியவை:
உங்கள் விரயாதிபதி பூராடம் நட்சத்திரத்தில் வருவதால் வீண் விரயங்கள், திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் நிலை ஏற்படலாம். நட்பு வட்டாரம் அதிகரிக்கலாம். உங்களின் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு கிட்டும். புதிய வீடு கட்டும் யோகம் உண்டாகும். சிறுசிறு வருத்தங்கள் மனதில் தோன்றி போகும். சகோதரர் வழியில் மனக்கசப்பு ஏற்படக் கூடும் எனவே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

guru bagwan

பரிகாரம்:
முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். ராகு காலத்தில் துர்கைக்கு விளக்கேற்றுங்கள். இரத்ததானம் செய்யுங்கள். வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவீர்கள்.