மேஷத்தில் உதயம் ஆன குரு பகவான். இதனால் அதிஷ்டம் பெரும் 5 ராசிக்காரர்கள்

Guru bagavan
- Advertisement -

நவகிரகங்களில் செவ்வாய் பகவான் என்பவர், ஒரு மனிதனின் தைரியம், போர்க்குணம், பூமி சம்பந்தமான சொத்துக்கள், திருமணம் போன்றவற்றுக்கு காரகத்துவம் வாய்ந்த கிரகமாக இருக்கிறார். ஜாதகத்தில் இருக்கின்ற 12 ராசிகளில் மேஷம், விருச்சிகம் என்பது செவ்வாய் பகவானுக்குரிய வீடுகளாகும். அத்தகைய செவ்வாய் பகவானுக்குரிய மேஷ ராசியில் குரு பகவான் பூசம் நட்சத்திரத்தில் உதயமாகி இருப்பதால் இந்த ராசிகாரர்களுக்கு வாழ்வில் பல நல்ல பலன்களை கொடுக்கும். அவை என்னென்ன ராசிகள் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

மேஷம்
பொதுவாக “‘குரு நின்ற இடம் பாழ்” என்கிற பழமொழி படி பார்க்கும் பொழுது, மேஷ ராசியில் இருக்கின்ற குரு பகவானால் ஒரு வருட காலம் முழுவதும் பாதகமான பலன்களை ஏற்படும் என சிலர் தவறாக கருதுகின்றனர். மேஷ ராசிக்கு 9 ஆம் மற்றும் 12 ஆம் வீடுகளின் அதிபதியாக குரு பகவான் திகழ்கிறார். அந்த அடிப்படையில் மேஷ ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் பணியிடங்களில் உயர் பதவிகள், ஊதிய உயர்வு பெறக்கூடும்.

- Advertisement -

ஒரு பணியில் இருப்பவர் வேறு நல்ல பணிக்கு மாறும் சூழல் அமையும். தொழில், வியாபார ரீதியாக அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீக ரீதியான காரியங்களில் ஈடுபட்டு புகழும், புண்ணியமும் பெறுவார்கள். மிகப்பெரிய லாபங்கள் இல்லை என்றாலும் பொருளாதார கஷ்ட நிலை ஏற்படாது.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த ஆண்டு குரு பகவான் 11 வீடான மேஷத்தில் பூச நட்சத்திரத்தில் உதயமாகி இருப்பதால் பல சிறப்பான பலன்களை பெறுவார்கள். பொருளாதார நிலை சிறப்பான வளர்ச்சி பெறும் திருமணம் போன்ற சுப காரிய தடைகளால் அவதிப்பட்டவர்கள் மன மகிழ்ச்சியான திருமண வாழ்வு கிடைக்கப்படுவார்கள்.

- Advertisement -

திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள். அரசாங்க ரீதியான காரியங்களில் சிறப்பான வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத லாபங்களை பெறுவார்கள். வெளியூர், வெளிநாடு பயணங்களால் பொருள் வரவு பெருகும்.

கடகம்
இந்த ஆண்டு கடக ராசியினருக்கு பத்தாம் வீடான மேஷத்தில், பூச நட்சத்திர குரு பகவான் உதயமாகி இருக்கிறார். பொதுவாக குரு பகவானுக்கு பத்தாம் இடப்பெயர்ச்சி என்பது சிறப்பான பலன்களை அந்த ராசியினருக்கு கொடுக்காது என்பது விதி. எனினும் குரு மேஷ ராசியில் இருந்தாலும், கடக ராசிக்குரிய பூச நட்சத்திரத்திலே குருபகவான் இருப்பதால், சிலருக்கு அரசு வேலை கிடைக்கக்கூடும். பொருளாதார நெருக்கடிகள் விலகும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த தன வரவு இருக்கும். சிலர் வெளியூர், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள கூடும். உத்தியோகம், அரசியலில் இருப்பவர்களுக்கு பழைய பதவிகள் விலக்கப்பட்டு, கூடுதல் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த ஆண்டு குரு பகவான் மேஷ ராசியில் பூச நட்சத்திரத்தில் உதயமாகி இருப்பது, பல எதிர்பாரா நன்மைகளை உண்டாக்கும். சிலர் பழைய வேலையில் இருந்து விடுபட்டு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சிறப்பான பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். சமுதாயத்தில் உங்களின் பெயரும், புகழும் பெருகும். ஈடுபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். சிலர் மகான்களின் ஆசிகளை பெற்று பல நற்பலன்களை வாழ்வில் அனுபவிப்பார்கள். குலதெய்வ கோயில் கட்டுமானம், குளங்கள் சீரமைத்தல் போன்ற ஆன்மீக ரீதியான பணிகளில் ஈடுபட்டு புண்ணியம் பெறுவார்கள்.

- Advertisement -