குருவாயூர் கோவிலில் யானை கொடுத்த தண்டனை

elephant
- Advertisement -

குருவாயூர் கோவிலில் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல கூடாது என்பது விதி. ஆனால் அதையும் மீறி ஒரு சட்டை அணிந்து சென்றார். அடுத்த கணமே அவருக்கு கோவில் யானை மூலம் தண்டனை கிடைத்தது. அங்கு அப்படி என்ன நடந்தது என்பதை பற்றி இந்த காணொளியில் தெளிவாக காண்போம் வாருங்கள்.

- Advertisement -

ஒரு காலத்தில் தமிழகத்தின் மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்த போது, சேர குல மன்னர்களால் ஆளப்பட்டது தான் இன்றைய கேரள மாநிலம். முற்காலத்தில் “பரசுராம ஷேத்திரம்” என்று அழைக்கப்பட்ட இன்றைய கேரளத்தில் சைவ மற்றும் வைணவக் கோவில்கள் பல உண்டு.அந்த வகையில் கேரள மக்கள் அனைவரும் வந்து வழிபடும் மிகவும் புகழ் பெற்ற வைணவ கோவில் தான் குழந்தையாக வீற்றிருக்கும் கண்ணனின் “ஸ்ரீ குருவாயூர் கோவில்”.

ஆகம விதிகளை மிகவும் கடுமையாக கடைபிடிக்கும் கேரள கோவில்களில் ஆண், பெண் இருபாலர்களும் மேற்கத்திய பாணி உடைகள் அணிந்து வந்தால் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் அக்கோவிலின் பிரகாரத்திற்குள் நுழையும் ஆண் பக்தர்கள் அனைவரும் மேல் சட்டை அணியக்கூடாது என்ற விதி காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. யாருக்காகவும் அதில் அவர்கள் சமரசம் செய்துகொள்வது இல்லை. அப்படியிருக்க இக்கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ தனது சட்டையை உடுத்திக்கொண்டு, அந்த குருவாயூர் கோவிலின் கருவறை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அக்கோவிலில் பல வருடங்களாக இருக்கும் யானை ஒன்று, அந்த பக்தரின் இந்த செய்கையை கண்டு தனது துதிக்கையால் அவரது சட்டையை பிடித்து இழுத்த போது, அவரும் சற்று நிலை தடுமாறி கீழே விழுந்ததால் அவரும் மற்ற பக்தர்களும் அந்த யானைக்கு மதம் பிடித்துவிட்டதாக எண்ணி பயந்துவிட்டனர். ஆனால் அந்த யானையிடம் சிறிய அளவு கூட ஆக்ரோஷம் காணப்படவில்லை. அக்கோவிலின் இறைவனாகிய குருவாயூரப்பனுக்கு அந்த பக்தர் செய்த அவமரியாதையை மட்டுமே அந்த யானை தடுத்தது. இதைக் கண்ட அந்த யானையின் பாகனும் மற்ற பக்தர்களும் அந்த பக்தரின் தவறை எடுத்துக் கூறினர். மேலும் அந்த பக்தருக்கு இக்கோவிலின் முழுமையான நன்மை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அந்த யானை அவ்வாறு செய்தது. அதே நேரத்தில் ஒரு யானை இறைவனுக்கு செலுத்தும் பக்தியும், மரியாதையும் கூட மனிதர்களாகிய நம்மால் தர இயலவில்லை என்பதையும் இந்நிகழ்வு காட்டுகிறது.

- Advertisement -