சமையலறையில் இருக்கும் இந்த 2 பொருள் போதுமே! உங்களை தேவதையாக மாற்ற. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உங்கள் அழகை சொல்ல வார்த்தை இருக்காது.

face4

பொதுவாகவே அழகு என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது பெண்கள் தான். அந்த பெண்கள் வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல பளபளவென மின்னி கொண்டே இருக்க வேண்டும். அடுத்தவர்களுடைய அழகைப் பார்த்து வர்ணிப்பதில் தவறு கிடையாது. அவர்களைப்போல் நாமும் அழகாக மாற வேண்டும் என்று நினைப்பதில் தவறு கிடையாது. அழகாக இருக்கும் அந்தப் பொருளை, நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது மட்டும் தான் தவறு. எல்லோரும் பார்த்து வியக்க கூடிய அளவிற்கு அழகை பெற, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய சுலபமான சூப்பரான ஒரு அழகுக் குறிப்பை தெரிந்து கொள்வோமா?

Vendhayam

உங்கள் தலைமுடியும் உங்களது சருமமும் பளபளப்பாக இருக்க சுலபமான ஒரு குறிப்பு. நேரடியாக சுற்றி வளைக்காமல் குறிப்பை பார்த்து விடுவோம். உங்கள் சமையலறையில் இருக்கும் வெந்தயம், பச்சை பயறு இந்த இரண்டு பொருள் மட்டுமே போதும் உங்களை மெருகேற்ற. ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் எடுத்துக் கொண்டால், அதே ஒரு கைப்பிடி அளவு பச்சை பயிரை எடுத்து முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துவிடுங்கள்.

மறுநாள் காலை எழுந்ததும் இதை மிக்ஸியில் போட்டு மொழு மொழுவென அரைத்து பேஸ்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். வெந்தயத்தையும் பச்சைப் பயறையும் ஊற வைப்பதற்கு முன்பாகவே தண்ணீரில் ஒரு முறை கழுவி விடுங்கள். ஏனென்றால் ஊற வைத்த தண்ணீரை ஊற்றித் தான் இந்த விழுதை தயார் செய்ய வேண்டும்.

pachai_payaru

நம்மை பளபளப்பாக மாற்றப்போகும் பேஸ்ட் மிக மிக சுலபமான முறையில் தயாராகி விட்டது. இதேபோல் முந்தைய நாள் இரவே உங்களுடைய தலை முடியில் தேங்காய் எண்ணெயை வைத்து நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் மறுநாள் காலை இந்த பேக்கை தலையில் அப்ளை செய்யும்போது நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

ஹேர் பேக்கை அரைத்து வைத்து விட்டோம். இரவே தலைமுடியில் வேர்க்கால்கள் தேங்காய் எண்ணெயை படும்படி ஊறவைத்து வைத்திருக்கிறீர்கள். இப்போது அரைத்து வைத்திருக்கும் விழுதை உங்கள் கையாலேயே எடுத்து, உங்களுடைய தலையில் மயிர் கால்களில் படும்படி நன்றாக தடவிட வேண்டும். அதன் பின்பு முடிகளின் கீழ் பகுதி வரையும் இந்த பேக்கை நன்றாக அப்ளை செய்து, முடியை கொண்டை கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

hair3

இந்த பேக் உங்களுடைய தலைமுடியில் 1 மணிநேரம் வரை நன்றாக ஊறட்டும். அதன் பின்பு நல்ல ஆர்கானிக் ஷாம்பு போட்டு தலையை சுத்தமாக அலசி விட வேண்டும். இதே போல் தான் இந்த பேக்கை தலையில் அப்ளை செய்த பின்பு, உங்களுடைய உடல் முழுவதும் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து குளித்தால் உங்களுடைய மேனி பளபளப்பாகும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை தாராளமாக பின்பற்றலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தலைக்கும் உடலுக்கும் சேர்த்து அழகை பெற்றுவிடலாம். பின்பு உங்களுடைய அழகை வர்ணிக்க வார்த்தை ஏது! முயற்சி செய்து தான் பாருங்களேன்.