இயற்கையான முறையில் உங்கள் தலையில் ஒரு வெள்ளை முடி கூட இல்லாமல், சொட்டை தலையிலும் முடி வளரும் இந்த அற்புத எண்ணெயை இப்படி உங்கள் வீட்டிலேயே தயாரித்துப் பாருங்கள்!

tea-coffee-hair
- Advertisement -

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப பிரச்சனைகளும் மாறிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தலை முடி உதிரும் பிரச்சனை தலை தூக்கியிருக்கும் இந்த காலத்தில் செயற்கையான கண்ட கண்ட எண்ணெய்களை உபயோகப்படுத்துவதை தவிர்த்திடுங்கள். தலைமுடிக்கு இயற்கை முறையை கையாள்வது தான் புத்திசாலித்தனம். அந்த வகையில் இயற்கையான முறையில் உங்கள் தலையில் இருக்கும் வெள்ளை முடிகளை எப்படி மாற்றுவது? முடி வளராத இடத்திலும் மீண்டும் முடி வளர செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நாம் தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெயை தான் பயன்படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் எனவே சுத்தமான தேங்காய் எண்ணெயை பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் தலைக்கு உபயோகப்படுத்த வேண்டாம். தேங்காய் எண்ணெயில் 100ml அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு கண்ணாடி பௌலில் ஊற்றி கொள்ளுங்கள்.

- Advertisement -

நாம் அனுதினமும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குடிப்பது டீ அல்லது காபி ஆகும். டீ தூள் மற்றும் காபி தூள் போன்றவற்றில் இருக்கும் காப்ஃபைன் என்னும் மூலப்பொருள் நம்முடைய தலைமுடியின் நிறத்தை மாற்றும் வல்லமை பெற்றுள்ளது. இந்த காப்ஃபைன் போதை தரக்கூடிய மூலக்கூறு என்பதால் அடிக்கடி காபி, டீ குடிப்பதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. எனவே ஒரு நாளைக்கு பத்து முறை காப்பி டீ குடிப்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காபி தூள் ஒரு டீஸ்பூன், டீ தூள் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக பவுடர் போல அரைத்துக் கொள்ளலாம். அல்லது உரலில் போட்டு இடித்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதை அப்படியே தேங்காய் எண்ணெயில் கலந்து கொள்ளுங்கள். பின்னர் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் காபி தூள், டீ தூள் கலந்த பின்பு ஏழு சொட்டு அளவிற்கு எலுமிச்சை சாற்றை பிழிந்து கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது நமக்குத் தேவையான எண்ணெய் ரெடி ஆகி விட்டது.

- Advertisement -

இந்த எண்ணெயை டபுள் பாய்லிங் முறையில் நீங்கள் லைட்டாக சூடு ஏற்றிக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் நன்கு தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீருக்கு மேலே இந்த கண்ணாடி பவுலை வைத்து பிடித்துக் கொள்ளுங்கள். வெதுவெதுப்பாக எண்ணெக்கு சூடு கிடைக்க வேண்டும். அப்போதுதான் எண்ணெயில் இருக்கும் காபி தூள், டீ தூள் எல்லாம் எண்ணெயுடன் ஒன்றுடன் ஒன்றாக கலக்க ஆரம்பிக்கும். ஒரு ஐந்து நிமிடம் வைத்து எடுத்தால் எண்ணெய் வெதுவெதுப்பாக மாறி இருக்கும், அதன் பின்பு அதனை நன்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

வடிகட்டிய இந்த எண்ணையை ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் மூன்று முறையாவது இந்த எண்ணெயை தலை முடியின் வேர்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து இது போல் செய்து வர இளநரை பிரச்சனை, முடி உதிர்தல் பிரச்சனை முற்றிலும் நீங்கும். மேலும் புதிய முடி வளரவும் உதவி செய்யும். இது சாதாரண எண்ணெய் என்பதால் நீங்கள் எண்ணெய் தேய்த்த பின்பு தலைக்கு குளிப்பதும், குளிக்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம் தான். யார் வேண்டுமானாலும் தாராளமாக இந்த எண்ணெயை பயன்படுத்தி பார்க்கலாம், நல்ல ரிசல்ட் கொடுக்கும் இந்த குறிப்பு உங்களுக்கும் பயன்படலாம்!

- Advertisement -