நிறைய முடி கொட்டும் பிரச்சனைக்கு நீங்கள் தொடர்ந்து செய்து வரும் இந்த 10 தவறுகளும் ஒரு காரணம் தான். இதில் ஏதாவது ஒரு தவறை நீங்க செய்யறீங்களான்னு பாருங்க.

- Advertisement -

நம்முடைய முடி உதிர்வுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். சில பேருக்கு உடலில் ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினால் முடி உதிரும். மன அழுத்தம் காரணமாக முடி உதிர்வதற்கு கூட நிறைய வாய்ப்புகள் உள்ளது. இயற்கையாக 70 லிருந்து 100 முட்டைகள் வரை தினம்தோறும் கொட்டத்தான் செய்யும். இதனால் எந்த பாதிப்பும் கிடையாது. இதை தவிர்த்து அதிகப்படியான முடி உதிர்வுக்கு நாம் செய்யக்கூடிய சில தவறுகள் காரணமாக இருக்கும். அது என்னென்ன என்பதைப் பற்றிய சில விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருந்தால் பின் சொல்லக்கூடிய தவறுகளை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், அதில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். முடி உதிர்வதில் நிச்சயமாக வித்யாசம் தெரியும். முடி உதிர்வது குறையும்.

Tip 1:
ரொம்பவும் சூடான தண்ணீரில் தலைக்குக் குளிக்கக் கூடாது. முடிந்த வரை பச்சை தண்ணீரில் தான் தலைக்கு குளிக்க வேண்டும். பச்சை தண்ணீரில் தலைக்கு குளித்தால் காய்ச்சல் சளி பிடிக்கும் என்பவர்கள் ரொம்பவும் வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Tip 2:
ஷாம்பூவை அப்படியே கையில் ஊற்றி அதை அப்படியே நேரடியாக தலையில் போடக்கூடாது. தலையில் தண்ணீர் ஊற்றாமல் தலையில் ஷாம்பு போட கூடாது. தலையில் தண்ணீரை ஊற்றி முடியை நனைத்து விடவேண்டும். ஷாம்புவை கொஞ்சம் தண்ணீரில் கலந்து, ஷாம்பு கலந்த தண்ணீரை தலையில் ஊற்றி தான் தலை முடியை தேய்த்துக் குளிக்க வேண்டும்.

Tip 3:
வெயில் காலம் வரப்போகிறது. தலை அடிக்கடி அழுக்காகத் தொடங்கும்‌. அதிகமாக தலையில் தூசு பட்டு, வியர்வை படிந்தால் முடி உதிர்வு அதிகமாகும். வெளியே செல்லும் போது உங்களுடைய தலையில் ஒரு காட்டன் துணியை கட்டிக்கொண்டு அதன் பின்பு வெளியே சென்றால் நல்லது. தினமும் பஸ்ஸில் டிராவல் செய்பவர்கள் கூட தலையில் ஒரு துணியை கட்டிக் கொண்டு செல்வது நல்லது. காற்று மாசுபாட்டால் ஏற்படும் முடி உதிர்வு குறையும்.

- Advertisement -

Tip 4:
தலைக்கு குளிக்கும் போது தலையில் கட்டாயம் எண்ணெய் இருக்க வேண்டும். எண்ணெய் இல்லாத தலையை தண்ணீர் ஊற்றி ஷாம்பு போட்டு தலை கசக்கினால் கட்டாயமாக முடி உதிர்வு அதிகமாகும்.

Tip 5:
ஈரமான முடியை அழுத்தம் கொடுத்து துடைப்பது. ஈர முடியை துண்டை வைத்து சில பேர் டப்பு டப்புன்னு தட்டி விடுவார்கள். அப்படி செய்தாலும் முடி உதிர்வு அதிகமாகும். ஈரத் தலைமுடியில் சீப்பை வைத்து வரவே கூடாது. தலை நன்றாக உலர்ந்த பின்பு தான் சீப்பை தலையில் வைக்க வேண்டும். ஈரமாக முடி இருக்கும் போது முடியை டிஸ்டப் செய்தால் முடி நிறைய கொட்டும்.

- Advertisement -

Tip 6:
உங்க தலை முடியில் வெடிப்பு இருந்தால் நீங்கள் எந்த பேக் போட்டாலும், எந்த ட்ரீட்மென்ட் செய்தாலும், என்ன சாப்பிட்டாலும் முடி வளர்வதில் மாற்றம் தெரியவே தெரியாது. நீங்களே நினைச்சுப்பீங்க. நம்மளுடைய தலைக்கு எந்த ஹேர் பேக் போட்டாலும் செட் ஆக மாட்டேங்குது. என்ன காரணம், தலைமுடியில் இருக்கும் வெடிப்பு. வெடிப்பு உள்ள முடிகளை உடனடியாக வெட்டிவிடுங்கள். இது தான் ஒரே தீர்வு.

Tip 6:
தினமும் தலைக்கு குளிப்பது அவ்வளவு சரியான விஷயம் அல்ல. முடிந்தவரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கலாம். தினமும் தலைக்கு குளித்தால் முடி உதிர்வது அதிகரிக்கத்தான் செய்யும்.

‌Tip 8:
தலையில் அடிக்கடி ஹீட்டிங் டூல் பயன்படுத்தக்கூடாது. அதாவது வீட்டில் இருக்கும்போதே தலையை அயன் செய்வது, ஸ்ட்ரெயிட்னிங் செய்து கொள்வது, கர்லிங் செய்துகொள்வது, இதுபோன்ற விஷயங்களை செய்தாலும் முடி உதிர்வு அதிகரிக்கும்.

Tip 9:
நிறைய பேர் தினமும் தலை சீவினால் முடி உதிர்கிறது என்று ஒரு கொண்டையை கட்டி வைத்துக் கொள்வார்கள். 2 நாட்கள் தலை சீவாமல் இருந்து, மூன்றாவது நாள் தலையை சீவும் போது அதிலிருக்கும் சிக்கு இன்னும் அதிகப்படியான முடி உதிர்வை உண்டாகும். தலை சீவுவது என்பது நம்முடைய மண்டை ஓட்டில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தலைக்கு மசாஜ் கொடுக்கும். தலையை சீவினால் முடி கொட்டிவிடும் என்று பயப்படாதீர்கள். தினமும் ஒருமுறை தலையை சீவினால் முடி நன்றாக வளரும்.

Tip 10:
மாதத்தில் ஒரு நாள் கட்டாயம் தலையில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வைத்து நன்றாக மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். இது தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வை குறைக்கும்.

- Advertisement -