- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி உதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியான கூந்தலை பெற

முடி உதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியான கூந்தலை பெற

- Advertisement -

நாம் எந்தளவிற்கு சுத்தமாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் ஆரோக்கியமாக இருப்போம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதே போல் தான் நம்முடைய தலைமுடியை நாம் எந்த அளவிற்கு சுத்தமாக பாதுகாக்கிறோமோ அந்த அளவிற்கு தலை முடி உதிர்தல் பிரச்சனையும் ஏற்படாது. முடியும் அடர்த்தியாக இருக்கும். அப்படி நாம் தலையை சுத்தப்படுத்துவதற்கு தான் வாரத்தில் இரண்டு முறை தலைக்கு குளிக்கிறோம். அவ்வாறு குளிக்கும் பொழுது ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினோம் என்றால் நம்முடைய தலைமுடி உதிர்தல் பிரச்சினை என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அந்த வழிமுறையை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நாம் நம் தலையை சுத்தப்படுத்துவதற்காக ஷாம்புவை பயன்படுத்துவோம். ஒரு சிலர் பாரம்பரிய முறைப்படி சிகைக்காயை வீட்டிலேயே அரைத்து பயன்படுத்துவார்கள். எதுவாக இருந்தாலும் இந்த ஷாம்பூ, சிகைக்காயை பயன்படுத்துவதற்கு தண்ணீர் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். சாதாரண தண்ணீரை ஊற்றி ஷாம்பூ சிகைக்காயை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த ஒரு தண்ணீரை ஊற்றி பயன்படுத்தினோம் என்றால் நம்முடைய தலை முடியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும். முடி வளர்ச்சி என்பது அதிகரிக்கும் என்று கூறலாம். அந்த தண்ணீரை எப்படி தயார் செய்வது என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இதற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படுகின்றது. காபித்தூள், கிராம்பு, பச்சரிசி இவை மூன்றும் தான் இந்த தண்ணீரை தயார் செய்வதற்கு தேவைப்படக் கூடிய பொருட்கள். காபித்தூளில் அதிக அளவில் கப்பைன் இருக்கிறது. மேலும் விட்டமின் சத்து அதிகமாக இருக்கிறது. காபித்தூளை பயன்படுத்தி நம்முடைய தலைமுடியின் நிறத்தை நாம் அதிகரிக்க முடியும். அதே சமயம் தலைமுடி வேகமாகவும் வளரும் என்று கூறப்படுகிறது.

கிராம்பை நாம் நம்முடைய தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் தலை முடி உதிர்தல் என்பதும் முற்றிலும் நீங்குவதோடு விரைவிலேயே தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. அரிசி முடி உதிர்வை கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. இப்பொழுது இந்த தண்ணீரை எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம்.

- Advertisement -

ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு காபித்தூளை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு அரிசி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீரை வைத்து அந்த தண்ணீர் கொதிக்கும் வரை நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அந்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதை எடுத்து நாம் கலந்து வைத்திருக்கும் இந்த காபி, கிராம்பு, அரிசியில் ஊற்ற வேண்டும்.

இதை நன்றாக கலந்து விட்டு அரை மணி நேரம் மூடி போட்டு அப்படியே மூடி வைத்து விடுங்கள். அரைமணி நேரம் கழித்து இதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது காபித்தூள் கிராம்பு அரிசி இவற்றின் சத்துக்கள் அனைத்தும் இந்த தண்ணீரில் வந்து சேர்ந்திருக்கும். இந்த தண்ணீரில் நாம் எப்போதும் தலைக்கு பயன்படுத்தக்கூடிய ஷாம்போ அல்லது சிகைக்காயோ போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களிலும் தலைமுடி நீளம் வரை இந்த தண்ணீரை நன்றாக ஊற்றி விரல்களால் 10 நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்து முடித்த பிறகு ஒரு கொண்டை போட்டு கொண்டு 15 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு எப்பொழுதும் தலைக்கு குளிப்பது போல் குளித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பளபளக்கும் மேனி தரும் உலர் திராட்சை

இப்படி ஒவ்வொரு முறையும் நாம் தலைக்கு குளிக்கும் பொழுது சாதாரண தண்ணீருக்கு பதிலாக இந்த தண்ணீரை பயன்படுத்தினோம் என்றால் நம் தலையில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதோடு முடி உதிர்தலை கட்டுப்படுத்தி வேகமாக முடியை வளர செய்யும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்