திராட்சை வைத்து தயாரிக்கப்படும் இயற்கையான ஒயின் குடித்தாலே பளிங்கு போல தகதகவென மேனி மின்னும். சருமம் பொலிவாக இருக்க உடலுக்கு உள்ளே மட்டுமல்லாமல், உடலுக்கு வெளியேவும் எப்படி உலர் திராட்சையை பயன்படுத்தி மேனியை பளபளப்பாக செய்வது? என்னும் ரகசியத்தை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து காண இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
தூசு, மாசு, மன இறுக்கம், வேலை பளு மற்றும் சில உடல் உபாதைகள் என்று பல காரணங்களால் நம் சருமமானது பொலிவை இழந்து சேதத்தை விளைவித்திருக்கும். இதிலிருந்து மீண்டு சருமம் தங்கம் போல தகதகவென்று ஜொலிக்க ஒரு ஸ்பூன் அளவிற்கு சாதாரண உலர் திராட்சை அல்லது கருப்பு உலர் திராட்சை இருந்தாலும் அதை நன்கு அலசி சுத்தம் செய்து ரோஸ் வாட்டரில் ஒரு இரவு முழுவதும் ஊற வையுங்கள். பின் மறுநாள் காலையில் பன்னீரில் ஊறிய உலர் திராட்சையை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த திராட்சை பேஸ்ட்டை பயன்படுத்தி மூன்று படிகளில் முகத்தை உள்ளிருந்தே மெருகூட்ட போகிறோம்.
ஸ்டெப் 1. Clensing :
கிளன்சிங் என்பது முகத்தை முதலில் சருமத்தின் வெளிப்புறத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், மாசுகளில் இருந்து சுத்தம் செய்ய வேண்டியது ஆகும். ஒரு சிறிய பௌலில் தயார் செய்து வைத்துள்ள திராட்சை பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்து முகத்தில் இருக்கக் கூடிய அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2. Scrubbing :
ஸ்க்ரப்பிங் என்பது முகத்தை ஸ்கிரப் செய்து முகத்தில் இருக்கும் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள், குட்டி குட்டியாக இருக்கக் கூடிய தேவையற்ற பூனை முடிகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு நல்ல ஒரு ரத்த ஓட்டத்தை கொடுக்கக் கூடியது ஆகும். இதற்கு பவுலில் ஒரு ஸ்பூன் திராட்சை பேஸ்டுடன், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கெட்டியாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு முகம் முழுவதும் மென்மையாக மசாஜ் போல செய்ய வேண்டும். அதிகம் அழுத்தம் கொடுக்காமல் ஆனால் வேகமாக பத்து நிமிடம் இது போல விரல்களால் முகத்திற்கு மசாஜ் செய்துவிட்டு முகத்தை கழுவி கொள்ளுங்கள். கடைசியாக முகத்திற்கு ஒரு பேக் போட்டு முடிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
2025 ஆவது வருடம் வெற்றி கொடுக்கும் மந்திர வார்த்தை
ஸ்டெப் 3. Face pack :
கடைசியாக ஒரு ஸ்பூன் திராட்சை பேஸ்டுடன், அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், அரை ஸ்பூன் கெட்டியான தயிர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆண்களாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளுக்கு பதிலாக முல்தானி மட்டி அல்லது கடலை மாவு பயன்படுத்தலாம். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் அப்ளை செய்து கொண்டு நன்கு உலர விட வேண்டும். 15 லிருந்து 20 நிமிடம் நன்கு உலர்ந்து காய்ந்ததும் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். இந்த மூன்று படிகளில் படிப்படியாக முகத்தை பண்படுத்தினால் இழந்த பொலிவை மீட்டு சரும சேதத்தில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமான சருமத்தை தங்கம் போல தகதகவென்று மின்ன வைக்கலாம்.