முடி உதிர்வு சம்பந்தமான அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக இந்த ஹேர் ஆயில் மட்டும் போதும்

oil
- Advertisement -

இன்றைய மாடர்ன் உலகில் தலைமுடிக்கு என்று அனைவரும் அக்கறை காட்டுவதில்லை. ஆகவே முடி உதிர்வு அதிகமாகிறது. மேலும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் காரணமாக அதிக மாத்திரைகள் சாப்பிடுவதாலும் பலரும் முடி உதிர்வு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தலைமுடிக்கு என்று கொஞ்சம் நேரமாவது ஒதுக்கி நாம் பராமரிப்பதன் மூலம் தலைமுடி பிரச்சினையை சரி செய்ய முடியும், முடி வளர்ச்சியையும் அதிகரிக்க முடியும். அதற்கு அன்றாட வாழ்வில் ஒரு சில விஷயங்களை மட்டும் நாம் கடைப்பிடித்தால் போதும். அதற்கு முதலில் தினமும் ஷாம்பு சேர்த்து தலைக்கு குளிப்பதை நிறுத்திவிட்டு, வாரத்திற்கு மூன்று முறை மட்டும் தலைக்கு குளிக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது முடியின் வேர்க்கால்கள் பலப்படும். அடுத்ததாக தலைமுடிக்கு என்று கடைகளில் விற்கப்படும் பல எண்ணெய்களை வாங்கி பயன் படுத்தாமல், வீட்டிலேயே இவ்வாறு எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 200 கிராம், விளக்கெண்ணை – 100 கிராம், வெந்தயம் – 2 ஸ்பூன், கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்.

- Advertisement -

ஹேர் ஆயில் செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் இவை இரண்டையும் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது இரும்பு கடாயை வைக்க வேண்டும். அதன் பின் 200 கிராம் தேங்காய் எண்ணெய் மற்றும் 100 கிராம் விளக்கெண்ணையை சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக சூடு ஏறியதும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள வெந்தய, சீரக பொடியை எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இந்தப் பொடியை எண்ணெயில் சேர்த்ததும் எண்ணெய் நுரையுடன் பொங்க ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் ஏதேனும் ஒரு கரண்டி வைத்து நன்றாகக் கிளறி விட வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து நிமிடம் அப்படியே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு அடுப்பை அனைத்துவிட வேண்டும். அடுப்பை அனைத்த பிறகு இந்த எண்ணெய்யை 4 மணி நேரம் அதே கடாயில் அப்படியே ஊறவிட வேண்டும்.

அப்பொழுதுதான் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் எண்ணெயில் இறங்க ஆரம்பிக்கும். எனவே நான்கு மணி நேரத்திற்கு பிறகு எண்ணெயை நன்றாக வடிகட்டி சுத்தமான ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர நல்ல பலன் கொடுக்கும். அப்படி முடியாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது தலையில் நன்றாக எண்ணெய் வைத்து, ஊறவைத்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்துவர உங்கள் முடி கொட்டும் பிரச்சனை தானாக நின்றுவிடும். முடியும் அதிகப்படியான வலுப்பெற்று, அடர்த்தியாக வளரும்.

- Advertisement -