3 நாட்களில் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த 3 பொடி போதும். கருகருவென முடி காடு போல வளர தொடங்கிவிடும்.

hair8
- Advertisement -

கருகருவென காடு போல முடி வளர வேண்டும். பார்ப்பதற்கு அடர்த்தியாக இருக்க வேண்டும். புதிய முடிகளின் வளர்ச்சி சீக்கிரம் இருக்க வேண்டும். அதே சமயம் இயற்கையான பொருட்களை வெளியில் சென்று எடுத்துவரும் கஷ்டமும் இருக்கக்கூடாது. கடையில் பவுடராக வாங்கி இன்ஸ்டன்டாக கலந்து கஷ்டமே இல்லாமல், தலையில் பேக் போட வேண்டும் என்றால் இந்த குறிப்பு உங்களுக்காக.

இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு தேவையான மூன்று பொடிகள் என்னென்ன. சடாமாஞ்சில் பொடி – 2 ஸ்பூன், செம்பருத்தி பூ பொடி – 2 ஸ்பூன், நெல்லிக்காய் பொடி – 2 ஸ்பூன், இந்த மூன்றுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

நிறையப் பேருக்கு சடாமாஞ்சில் பொடி என்றால் என்னவென்று தெரியாது. சடாமாஞ்சில் என்பது ஒரு தாவர வகையைச் சேர்ந்தது. இது ஒரு மூலிகை செடி. இதன் வேர் மிகவும் கருப்பாக இருக்கும். அந்த கருமையான நிறம் நம்முடைய தலைமுடிக்கும் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த சடாமாஞ்சில் பொடியை, இந்த பேக்கில் நாம் பயன்படுத்துகின்றோம்.

இந்த மூன்று பொடியையும் தேங்காய் பால் ஊற்றி பேக் போல தயார் செய்து கொள்ள வேண்டும். பேக் ரொம்பவும் கெட்டியாக இருக்கக் கூடாது. கொஞ்சம் தளதளவென லிக்விடாக இருந்தால் தலையில் அப்ளை செய்வதற்கு சுலபமாகவும் வசதியாகவும் இருக்கும். ஒரு சிறிய பௌலில் 3 பொடியையும் மேல் சொன்ன அளவுகளில் போட்டு விட்டு, தேவையான அளவு திக்கான தேங்காய் பாலை ஊற்றி கரைத்து இதோடு, 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி கலந்தால் ஹேர் பேக் தயார்.

- Advertisement -

உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெயை வைத்து முதலில் 5 நிமிடம் போல மசாஜ் செய்து விடுங்கள். அதன் பின்பு இந்த பேக்கை ஸ்கால்ப்பில் நன்றாக படும்படி தடவிவிட்டு, முடியின் கீழ்பாகம் வரை அப்ளை செய்துவிட்டு, அதன் பின்பு கொண்டை கட்டிக் கொள்ள வேண்டும். 20 லிருந்து 25 நிமிடங்கள் வரை இந்த பேக் உங்களுடைய தலையிலேயே இருக்கலாம். அதன் பின் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். பிறகு தலையை உலரவைத்து விட்டு, நீங்களே கண்ணாடி முன்பு நின்று உங்களுடைய முடியை தொட்டுப் பாருங்கள். வித்தியாசம் தெரியும். வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை பயன்படுத்தினாலே போதும். மூன்று மாதங்களில் முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசம் தெரியும்.

குறிப்பாக ஹாஸ்டலில் தங்கி படிக்க கூடிய பெண்களுக்கு இந்த ஹேர் பேக் ரொம்பவும் வசதியாக இருக்கும். தேங்காய் பாலுக்கு பதிலாக தண்ணீர் ஊற்றி இந்த ஹேர் பேக்கை போடலாமா என்று சிலர் கேட்பார்கள்‌. நாம் இந்தப் பேக்கில் சேர்த்து இருக்கக் கூடிய பொருட்கள் எல்லாமே ட்ரையாக இருக்கக் கூடிய பொருட்கள் என்பதால், தலைமுடிக்கு ஈரப்பதத்தை கொடுக்க தேங்காய் பால் அவசியம் தேவை. தொடர்ந்து இந்த பேக்கை மூன்று முறை போடும் போது உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரியும். உங்களுக்கு இந்த பேக் பிடிச்சிருந்தா ஒருமுறை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

- Advertisement -