முடி உதிர்வதை உடனடியாக தடுத்து நிறுத்தும் சக்தி இந்த 2 பொருளுக்கும் உண்டு. இதை மழைக்காலத்திலும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

hair15
- Advertisement -

இன்று, நூற்றில் 90 சதவிகிதம் பேருக்கு இந்த முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. சாதாரணமாக ஐம்பதிலிருந்து நூறு மூடிகள் ஒரு நாளைக்கு கொட்ட தான் செய்யும். அதை பார்த்து யாரும் பயப்படவும் வேண்டாம். முடி கொட்டுகிறதே என்று கவலைப்படவும் வேண்டாம். ஆனால் இதையும் தாண்டி முடியை கையில் தொட்டாலே கொத்து கொத்தாக முடி தலையிலிருந்து கழண்டு வருகிறது, எனும் போது தான் அதில் நமக்கு பிரச்சனையே வருகிறது. இப்படிப்பட்டவர்கள் பின்பற்றி பார்க்க வேண்டிய ஒரு சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதில் உங்கள் முடிக்கு எது செட் ஆகுது அப்படின்னு தேர்ந்தெடுப்பது உங்கள் கையில் தான் உள்ளது. அதே சமயம் உங்களுக்கு அலர்ஜியை தரக்கூடிய பொருட்களை நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.

குறிப்பு 1:
இந்த குறிப்பை நீங்கள் மழைக்காலத்தில் கூட பயன்படுத்தலாம். முடி உதிர்வை குறைக்க இது ஒரு பெஸ்ட் ரெமிடி. 100% இல்லைங்க, 1000% இந்த டிப்ஸ் வொர்க் அவுட் ஆகும். முதலில் இஞ்சியை துருவியோ அல்லது இடித்தோ அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி சாறு 2 டேபிள் ஸ்பூன் இருந்தால், அதில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை உங்களுடைய முடியில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

- Advertisement -

முடியை பாகம் பாகங்களாக பிரித்து முடியின் வேர்க்கால்களில் இந்த எண்ணெயை படும்படி வைக்க வேண்டும். ஒரு காட்டன் பஞ்சில் இதைத் தொட்டுக் கூட நன்றாக ஸ்கேல்பில் அப்ளை செய்து கொள்ளலாம். அதன் பின்பு முடியின் நுனி வரை இந்த மீதம் இருக்கும் சாறை தேய்த்து விட்டு இரண்டு நிமிடம் தலையை மசாஜ் செய்து கொண்டை கட்டிக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாள் இதை நீங்கள் பின்பற்றி வர முடி வலிமையாகும். முடி உதிர்வு குறையும். இந்த குறிப்பு மழைக்காலத்தில் கூட சளி பிடிக்காது.

குறிப்பு 2:
சாதாரணமாக முடி வளர்ச்சி பெற வெரும் வெந்தயத்தை மட்டும் தானே ஊற வைத்து தலையில் போடுவோம். ஆனால் வெந்தயம் 2 ஸ்பூன், எடுத்துக் கொண்டால் துவரம் பருப்பு 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு முந்தைய நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை இந்த ஊற வைத்த தண்ணீரோடு வெந்தயம் துவரம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பேஸ்ட் செய்து இதை தலையில் போட்டு ஊறவைத்து அப்படியே கசக்கி குளித்து விட்டால் தலையில் இருக்கும் அழுக்கும் சுத்தமாக போய்விடும்.(ஷாம்பு கூட போட வேண்டாம்.) அதேசமயம் முடியும் வலிமை பெறும். துவரம் பருப்பில் இருக்கும் கூடிய ஊட்டச்சத்துக்களும் உங்கள் முடிவை சென்றடையும்.

- Advertisement -

வெந்தயம் குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய பொருள். ஆகவே உங்களுக்கு தலைபாரம் வரும் எனும் பட்சத்தில் வெந்தயத்தை பயன்படுத்தாதீங்க. வெந்தயத்திற்கு பதில் முட்டை வெள்ளை கருவை கூட உங்கள் தலையில் போட்டு வரலாம். இதையும் வாரத்தில் இரண்டு நாள் பின்பற்றினால் முடி இரண்டு மடங்கு வலிமை பெறும். முட்டையின் வெள்ளை கருவை தலையில் மழைக்காலத்தில் போட்டாலும் சளி பிடிக்காது. தலைபாரம் வராது.

குறிப்பு 3:
சீப்பை தலையில் வைத்தாலே முடி வந்துவிடுகிறது. ஹேர்பேண்ட் போட்டு கழட்டினால் அந்த ஹேர் பேண்ட் முழுவதும் முடி என்பவர்கள் ஒரு இரண்டு முறை இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். வெள்ளை பூண்டு எடுத்து அதனுடைய தோலை நீக்கிவிட்டு, அதை குறுக்கே வெட்டிக் கொண்டாலும் சரி, அல்லது எப்படி வேண்டும் என்றாலும் வெட்டிக் கொள்ளுங்கள்.

பூண்டு உள்ளே இருக்கும் அந்த சாறு உங்க ஸ்கேல்பில் படும்படி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.(பூண்டினை உங்களுடைய மண்டையில் வைத்து தேய்க்க வேண்டும்.) பூண்டை முடிக்குள் விட்டு அப்படியே லேசாக தேய்த்து தேய்த்து கொடுக்க வேண்டும். இந்த பூண்டு மசாஜ் உடனடியாக முடி உதிர்வை நிறுத்தும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு மேலே சொன்ன குறிப்புகள் பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். இதில் ஏதாவது பொருள் உங்களுக்கு அலர்ஜியாக இருக்கும் என்றால் அந்த பொருளை நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -