முடி உதிர்வை தடுக்கும் பானம்

hair loss drink
- Advertisement -

முடி உதிர்தல் பிரச்சனை என்பது இன்றைய காலத்தில் பலராலும் சந்திக்க கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக திகழ்கிறது. இந்த பிரச்சினையை சரி செய்வதற்கு பலர் ஹேர் ஆயில், ஹேர் மாஸ்க், அதுமட்டுமல்லாமல் மருத்துவரிடம் சென்று சில சிகிச்சைகள் என்று பலவற்றை மேற்கொள்கிறார்கள். இவற்றை செய்வதன் மூலம் முழுமையாக முடி உதிர்தல் பிரச்சினை நின்று விட்டதா? என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

காரணம் முடி உதிர்தல் என்பது வெளிப்புற காரணிகளால் ஏற்படக்கூடிய விஷயம் மட்டுமல்லாமல் உடலுக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் நீக்குவதற்குரிய செயலாகவே திகழ்கிறது. அதனால் வெளியில் நாம் எவ்வளவு செய்தாலும் உள்ளுக்குள் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதன் மூலமே முழுமையாக முடி உதிர்வை நம்மால் தடுக்க முடியும். இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் எந்த பானத்தை நாம் தினமும் அருந்தி வந்தால் முடி உதிர்தல் என்பது முற்றிலும் நின்று ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

முடி உதிர்தல் பிரச்சினை என்பது பல காரணங்களால் ஏற்படும். பொடுகு பிரச்சனை இருப்பது, உடல் உஷ்ணம், கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவது, தலைக்கு குளிக்கும் போது அதிக அளவு அழுத்தம் கொடுத்து குளிப்பது, தலையில் அழுக்குகளை சேர விடுவது, ஹீமோகுளோபின் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, உடலில் ஏதேனும் நோய்களின் தாக்கத்தால் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பொழுது இப்படி பல காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனை என்பது ஏற்படும்.

நம்முடைய உடலில் நமக்கு எதனால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்தால் தான் முடி உதிர்தலை நம்மால் முற்றிலுமாக நிறுத்த முடியும். என்னதான் நாம் முடி உதிர்தலுக்காக ஹேர் மாஸ்க், ஹேர் ஆயில் என்று செய்தாலும் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் முடி வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். அப்படிப்பட்ட ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறுவதற்கு உதவக்கூடிய பானத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் டீ, காபி என்று சாப்பிடுவதற்கு பதிலாக இந்த ஒரு ஜூசை குடித்தால் போதும். இந்த ஜூசை தயார் செய்வதற்கு நமக்கு ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை வேண்டும். பிறகு ஒரு வெள்ளரி, ஒரு பெரிய நெல்லிக்காய் வேண்டும். வெள்ளரியையும், நெல்லிக்காயையும் பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொண்டு அதனுடன் கருவேப்பிலையையும் சுத்தம் செய்து சேர்த்து ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த விழுதுடன் மறுபடியும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு முறை நன்றாக அரைத்து பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும். விருப்பப்படுபவர்கள் இதனுடன் தேனை கலந்தும் குடிக்கலாம். இப்படி தினமும் நாம் அருந்தி வர நம் உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நமக்கு கிடைத்து நம்முடைய முடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நின்றவிழும். இதோடு தலைமுடியையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொண்டால் முடி உதிர்தல் பிரச்சினை என்பது முற்றிலும் நின்றுவிடும்.

இதையும் படிக்கலாமே: சாதம் வடித்த கஞ்சியின் பயன்கள்

உடலை எந்த அளவுக்கு ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறோமோ அதே அளவிற்கு நம்முடைய முடியும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உண்ண வேண்டும்.

- Advertisement -