இன்றைய காலத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படக்கூடிய ஒரு முக்கியமான விஷயம் தலைமுடி உதிர்தல் தான். சும்மா தலையில் கையை வைத்தால் கூட கையுடன் முடி வந்து கொண்டிருக்கிறது என்று புலம்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். இதற்கு அவர்களுடைய உணவு முறையும், சுற்றுப்புற சூழலும், அதே சமயம் அவர்களுடைய உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுமே காரணமாக திகழ்கின்றன. இவை அனைத்தையும் சரி செய்தாலும் கூட ஒரு சிலருக்கு முடிகள் உதிர்வது என்பது குறைவதும் கிடையாது. உதிர்ந்த இடத்தில் முடி வளர்வதும் தாமதம் ஆகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த சீரத்தை பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
உதிர்ந்த முடி வேகமாக வளர
கடைகளில் செயற்கையாக விற்கக்கூடிய எந்த ஒரு பொருட்களாக இருந்தாலும் அது இயற்கையாகவே தயார் செய்த பொருளாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஏதாவது ஒரு ரசாயனத்தை கலக்கத்தான் செய்வார்கள். அதனால் ஒரு சிலருக்கு பாதிப்புகள் உண்டாகத்தான் செய்யும். அதனால் முடிந்த அளவில் கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே நாமே நம் கை பட பார்த்து பார்த்து தயார் செய்யக்கூடிய எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதற்கு எந்தவித பக்க விளைவுகளுமே ஏற்படாது. அந்த வகையில் தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய ஒரு சீரத்தை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த சீரத்தில் நாம் சேர்க்கக்கூடிய எந்த ஒரு பொருளுமே நம்முடைய வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருள்தான். இதற்காக நாம் தனியாக கடைக்கு சென்று வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. மேலும் இவை அனைத்தும் நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய பொருட்கள் தான். அதுதான் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயம் மற்றும் பூண்டு. இதோடு நம்முடைய அன்றாட நாளை தொடங்கக்கூடிய காபித்தூளும் தான். இதற்கு நாம் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதேபோல் மூன்று பல் பூண்டை தோலுரித்து அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் இந்த வெங்காயம் பூண்டை சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காப்பி தூளையும் சேர்த்து ஒரு கப் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு கொதி வந்த பிறகு இதை மூடி வைத்து நான்கு நிமிடம் குறைந்த தீயில் வைத்து விடுங்கள். நான்கு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு இதை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் நம்முடைய தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய சீரம் தயாராகிவிட்டது.
இதை என்றைக்கு நாம் தலைக்கு குளிக்கிறோமோ அன்றைக்கு நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாக படும்படி ஸ்ப்ரே செய்து விரல் நுனிகளால் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரை பயன்படுத்தி இந்த சீரத்தின் ஈரப்பதம் அப்படியே தலையில் தங்கும் படி கட்டிவிட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து நாம் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து விடலாம். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் நாம் இந்த சீரத்தை பயன்படுத்தி தலைக்கு குளித்தோம் என்றால் இதில் இருக்கக்கூடிய வெங்காயம் மற்றும் பூண்டின் பலனால் நம்முடைய தலையில் இருக்கக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினை நீங்குவதோடு முடி உதிர்தலை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே:முடி கொட்டுவது நிற்க மாஸ்க்
அனைவரின் இல்லங்களிலும் கண்டிப்பான முறையில் இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களை மட்டும் வைத்து நாம் சீரம் தயார் செய்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் போதும். எப்பேர்ப்பட்ட முடி உதிர்வும் நின்று முடி வேகமாக அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.