- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilதலைமுடி கருமையாகவும் வேகமாகவும் வளர

தலைமுடி கருமையாகவும் வேகமாகவும் வளர

- Advertisement -

பலரும் தங்களுடைய தலைமுடி நீளமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இன்னும் சிலரோ சிறிய அளவில் இருந்தாலும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இன்னும் சிலரோ கருகருவென்று இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இன்னும் சிலரோ எனக்கு இருக்கக்கூடிய முடி அப்படியே இருக்கட்டும் அது கூடவும் வேண்டாம் குறையவும் வேண்டாம் என்று நினைப்பார்கள். இப்படி எதுவாக இருந்தாலும் அவர்கள் தலை முடியை பாதுகாக்கும் ஒரு அற்புதமான ஹேர் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

தலைமுடி வளர குறிப்பு

தலை முடியை பாதுகாக்க கூடிய பல அற்புதமான பொருட்கள் இயற்கையிலேயே கிடைக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். எந்த பொருளை எப்படி உபயோகப்படுத்தினால் நம்முடைய தலைமுடியில் எந்த பிரச்சனை சரியாகும் என்பதை தெளிவாக தெரிந்த பிறகு பயன்படுத்தினால் தான் அதன் பலனை நம்மால் முழுமையாக அடைய முடியும். அந்த வகையில் நம்முடைய தலைமுடியை வலுவாக்கி நீளமாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும், பொடுகற்ற ஆரோக்கியமான முடியை பெறுவதற்கும் உதவக்கூடிய ஒரு ஹெட் பேக்கை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு நமக்கு நான்கு ஸ்பூன் அளவிற்கு தயிர் தேவைப்படும். தயிர் என்பது தலைக்கு குளிர்ச்சியை தருவதோடு முடி வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் பொடுகு பிரச்சினையை நீக்க வல்லது. இதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கடுகு எண்ணெயை ஊற்ற வேண்டும். கடுகு எண்ணெயில் ஒமேகா 3 இருக்கிறது. இதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் முடியின் வேர்க்கால்களை வலுவாக்கவும் இது உதவுகிறது. அடுத்ததாக இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். முடியை பட்டு போல மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக் கொள்வதற்கு இந்த தேங்காய் எண்ணெய் உதவுகிறது.

இப்பொழுது இவை மூன்றையும் நன்றாக கலந்து உங்களுடைய தலை முடியின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு கனமான டவலை எடுத்து சுடுதண்ணீரில் நனைத்து பிழிந்து உங்களுடைய தலையில் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரத்தில் இருந்து 40 நிமிடம் வரை இது அப்படியே இருக்கட்டும். பிறகு நீங்கள் எப்பொழுதும் தலைக்கு குளிக்கும் ஷாம்புவை பயன்படுத்தி உங்களுடைய தலையை அலசி கொள்ளலாம்.

- Advertisement -

இந்த முறையில் வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் தொடர்ச்சியாக செய்து கொண்டு வருபவர்களுக்கு அவர்களுடைய தலைமுடியில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் தீரும். பொடுகு பிரச்சனை தீரும். முடி உதிர்தல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும். இருக்கக்கூடிய முடிகள் வலுவாக மாறும். கருமையான முடியையும் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:முகம், மூக்கு சொரசொரப்பு நீங்க

வீட்டில் இருக்கக் கூடிய இந்த மூன்று பொருட்களையும் பயன்படுத்தி நம்முடைய தலைமுடியை வேகமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர வைக்க முடியும். இயற்கையோடு சேர்ந்து நம்முடைய முடியை பாதுகாப்போம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்