முகம் மற்றும் மூக்கு பகுதிகளில் பெரும்பாலும் சிலருக்கு சொரசொரப்பாக இருப்பதுண்டு. போதுமான தண்ணீர் குடிக்காதவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கோ மூக்கு பகுதிகளில் மட்டும் கருப்பு நிறத்தில் திட்டு திட்டாக இருக்கக்கூடும். இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சரி செய்து பளபளவென்ற சருமத்தை மீட்டெடுக்க என்ன செய்வது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பகுதியின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.
சருமத்தில் எல்லா பகுதியிலும் ஒரே மாதிரியான தன்மையுடன் இருந்தால் தான் நாம் பார்ப்பதற்கு அழகாக இருப்போம். அதில் மூக்கு மட்டும் சொரசொரவென்று இருக்கும் பொழுது கடினமாக தோன்றும். மூக்கில் இருக்கும் தோல் பகுதி மிகவும் மென்மையானது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும் பொழுது சிறு சிறு கட்டிகளும் தோன்றும். மூக்கு மற்றும் உதடுக்கு கீழ்ப்பகுதியில் இது போன்ற பிரச்சனைகள் அதிகமாக வரும்.
அழகு நிலையங்களுக்கு போய் செலவு செய்யும் பொழுது அப்பகுதிகளில் இருக்கக் கூடிய வெண்புள்ளிகள், கரும்புள்ளிகளை தற்காலிகமாக நீக்க செய்வார்கள். இதற்கு நிரந்தர தீர்வு என்பது இயற்கை முறையில் தான் இருக்கிறது. வீட்டில் சாதாரணமாக புழங்கக் கூடிய இந்த சமையல் கட்டு பொருட்கள் நம் முகத்தை எப்படி பளிங்கு போல மாற்றப் போகிறது? என்பதை பார்ப்போம்.
சமையல் செய்ய பயன்படுத்தப்படும் லவங்கப்பட்டை நான்கைந்தை எடுத்துக் கொள்ளுங்கள். வாணலியில் போட்டு லேசாக ஒரு நிமிடம் வறுத்து ஆற வைத்து மிக்ஸர் ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அல்லது மூலிகை பொருட்கள் கிடைக்க பெறும் இடங்களில் இருந்து பட்டை பொடியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பட்டை பொடி அரை ஸ்பூன் அளவிற்கு ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு பட்டை பொடியுடன் பேஸ்ட் போல குழைத்து பயன்படுத்த சிறிதளவு லெமன் சாற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
எலுமிச்சை சாறுடன் பட்டை பொடி கலந்து பேஸ்ட் போல செய்து சொரசொரப்பான பகுதிகளில் மென்மையாக மசாஜ் செய்வது போல செய்து வர வேண்டும். எந்த உபகரணங்களும் இல்லாமல் இந்த சாதாரண பொருட்கள் நம் மூக்கு மற்றும் உதடுக்கு கீழ் பகுதி, முகம் போன்ற எல்லா பகுதிகளிலும் இருக்கக் கூடிய வெண்புள்ளிகள், கரும்புள்ளிகளை ஈசியாக அகற்றி கொடுக்கும். கடினமான இந்த பகுதிகளில் கொஞ்சம் கூட அழுத்தம் கொடுக்கக் கூடாது. மிகவும் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் இது போல மென்மையாக சொரசொரப்பு இருக்கும் இடங்களில் மட்டும் மசாஜ் செய்த பின்பு ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
இழந்தது திரும்பக் கிடைக்க சிவ மந்திரம்
வாரம் ஒரு முறை இது போல மசாஜ் செய்து வரும் பொழுது இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். நீங்கள் முதல் நாள் செய்யும் பொழுது நுண்ணிய வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி பார்ப்பதற்கு ஆச்சரியப்படும் வகையில் சருமம் மென்மையாக தோற்றமளிக்கும். மசாஜ் செய்த பின்பு முகத்தில் சிறிதளவு எரிச்சல் இருக்கக்கூடும், எனவே இதனை சரி செய்ய கற்றாழை ஜெல்லை பயன்படுத்துங்கள். கற்றாழை மடலை பிரித்து ஏழு, எட்டு முறை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு பசை போல குழைத்து முகத்தில் முழுவதுமாக அப்ளை செய்து காய விடுங்கள். உலர்ந்து காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரினால் அலம்பினால் போதும், முகம் கண்ணாடி போல மின்னும்.