மன்னனுக்கு கிரீடம் எப்படி முக்கியமோ அதே போல் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய தலைமுடி என்பது முக்கியம். தலைமுடி இல்லாத நபர்களை எப்படி எல்லாம் நாமே கிண்டல் செய்திருப்போம் என்று யோசித்துப் பார்த்தால் அந்த நிலைமை நமக்கு வரக்கூடாது என்ற எண்ணம் தோன்றிவிடும். அப்படி முடி உதிர்வு பிரச்சினையை சந்திப்பவர்கள் அந்த முடி உதிர்வை நிறுத்தி புதிய முடிகளை வளரச் செய்வதற்கு எந்த இரண்டு பொருட்களை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்க வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
முடி உதிர்வு பிரச்சினை என்பது பல காரணங்களால் பலருக்கும் ஏற்படுகிறது. எந்த காரணத்தால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிப்பதே மிகவும் கடினமான ஒன்றாக திகழ்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பொதுவான காரணங்களை யோசித்து அதற்குரிய முறையில் நாம் பின்பற்றி நம்முடைய முடியை பராமரித்தோம் என்றால் கண்டிப்பான முறையில் முடி உதிர்ந்த இடத்திலும் புதிய முடிகள் வளர்வதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும். அப்படி பொதுவான காரணங்களால் ஏற்படக்கூடிய முடி உதிர்வை சரி செய்வதற்குரிய ஒரு எளிமையான எண்ணெயை பற்றி பார்ப்போம்.
இந்த எண்ணெயை தயார் செய்வதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள் இருந்தால் போதும். முதலாவதாக இதற்கு நமக்கு தேவைப்படுவது கருஞ்சீரகம். கருஞ்சீரகத்தை நம்முடைய தலையில் நாம் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் வளரும். வழுக்கை ஏற்படாமல் தடுக்கும். இளநரை பிரச்சினையையும் நீக்கும். இரண்டு ஸ்பூன் கருஞ்சீரகத்தை எடுத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக நமக்கு தேவைப்படுவது வெந்தயம். வெந்தயத்தை நாம் பயன்படுத்துவதன் மூலம் உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய முடி உதிர்வை தடுக்கிறது. மேலும் இதில் அதிக அளவு புரோட்டின், இரும்பு சத்து இருப்பதால் சத்துக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய முடி உதிர்வையும் தடுத்து முடியை வளரச் செய்யும். வெந்தயத்தையும் இரண்டு ஸ்பூன் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக நைசாக அரைத்து ஏற்கனவே நாம் வைத்திருக்கும் கருஞ்சீரகத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நமக்கு தேவைப்படுவது தேங்காய் எண்ணெய். இது சுத்தமான செக்கு தேங்காய் எண்ணையாக இருந்தால் மிகவும் நல்லது. 200 எம்எல் தேங்காய் எண்ணெயை எடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த பொடியுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு டபுள் பாய்லிங் மெத்தடில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த எண்ணையை வைத்து விட வேண்டும்.
லேசாக எண்ணெய் சூடாகினால் போதும். கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது அடிக்கின்ற இந்த வெயிலுக்கு நாம் ஒருநாள் முழுவதும் மொட்டை மாடியில் வைத்தாலே எண்ணெய் நன்றாக சூடாகி விடும். இந்த எண்ணையை வாரத்திற்கு இரண்டு முறை நம்முடைய வேர்கால்களில் நன்றாக தடவி அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு சிகைக்காய் அல்லது மயில்டான ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து விட வேண்டும். எப்பொழுதும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது போலவும் இந்த எண்ணெயை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: சருமத்தின் அழகை அதிகரிக்கும் மாவு
மிகவும் எளிதில் அதே சமயம் அதிக பலனை தரக்கூடிய இந்த எண்ணையை நாமும் தயார் செய்து நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வோம்.