கத்தை கத்தையாக காடு போல முடி வளர்ச்சிக்கு, தேங்காய் எண்ணெயை தலையில் இப்படி தடவிப் பாருங்கள்.

hair4
- Advertisement -

தேங்காய் எண்ணெயை தலையில் வைக்கும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு இல்லாமலேயே போய்விட்டது. பிறகு எப்படி முடி வளர்ச்சி இருக்கும். முடி உதிர்ந்து கொட்டத்தான் செய்யும். உடல் சூடு ஏற ஏற தலையிலிருந்து முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். தலைமுடி நன்றாக வளர முதலில் தினம்தோறும் தேங்காய் எண்ணெயை தலைக்கு வைக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். சரி இந்த தேங்காய் எண்ணெயை சீராக தலைக்கு வைத்து வந்தும் முடி கொட்டும் பிரச்சனை இருக்கிறது என்றால், தேங்காய் எண்ணெயை இப்படி உங்களுடைய தலையில் வைத்துப் பாருங்கள்.

அதாவது தேங்காய் எண்ணெயோடு இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கலந்து 30 நாட்கள் தலையில் வைத்து வாருங்கள். 30 நாள் கழித்து உங்களுடைய முடி வளர்ச்சியில் என்ன வித்தியாசம் தெரிகிறது என்று உங்களாலேயே கண்கூடாக கண்ணாடியில் பார்க்க முடியும்.

- Advertisement -

தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர், விளக்கெண்ணைய் – 50ml, விட்டமின்  – E ஆயில் 5, மிளகு பொடி – 1/2 ஸ்பூன். அவ்வளவு தான். ஒரு அகலமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் விளக்கெண்ணெய், விட்டமின் E கேப்ஸ்யூலுக்கு உள்ளே இருக்கும் ஜெல், பிறகு மிளகுப் பொடி, இந்த பொருட்களை எல்லாம் மேலே சொன்ன அளவுகளில் போட்டு நன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெயை தினந்தோறும் தலையில் எப்படி தேங்காய் எண்ணெய் வைப்பீர்களோ, அப்படி வைத்து வர தலைமுடி உதிர்வு குறையும். தலைமுடி அடர்த்தியாக வளரும். குறிப்பாக முடி வளர்ச்சி இல்லாத இடங்களில் சீக்கிரமாக முடி வளர்ச்சியை தூண்டும் சக்தி இந்த எண்ணெயில் உள்ளது. நிறைய பேருக்கு இந்த விட்டமின் E ஆயிலை பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் எழுகின்றது. தாராளமாக பயன்படுத்தலாம். 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் 5 கேப்ஸ்யூல் மட்டும் சேருங்கள். சீக்கிரம் முடி வளர வேண்டும் என்று அதிகமான கேப்ஸ்யூல் சேர்த்துக் கொண்டாலும் பிரச்சனை தான்.

- Advertisement -

தலையில் மேலோடு எண்ணெய் வைத்தோம் என்று இருக்கக்கூடாது. தலையில் இருக்கும் முடியை பாகம் பாகமாக பிரித்து எல்லா மயிர்க்கால்களில் படும்படி எண்ணெயை வைத்துவிட்டு அதன் பின்பு ஒரு ஐந்து நிமிடங்கள் உங்கள் விரல்களை வைத்து தலையை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

தனக்குத்தானே தலையில் மசாஜ் செய்வது கொஞ்சம் கடினமான விஷயம். உங்களுடைய வீட்டில் உங்களுடைய அம்மா அல்லது கணவரோ அல்லது வயதில் மூத்த பிள்ளைகள் இருந்தால் கூட ஒருவர் மாற்றி ஒருவர் தலையை ஆயில் மசாஜ் செய்து கொள்வது மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒரு நாள் இப்படி ஆயில் மசாஜ் செய்துவர தலையில் இருக்கும் ரத்த ஓட்டம் சீராகி முடி வளர்ச்சி அதிகமாக தூண்டப்படும்.

தொடர்ந்து மேலே சொன்ன முறையில் தலையில் தேங்காய் எண்ணெயை வைத்து வர முடி அடர்த்தியாக ஷைனிங்காக உடையாமல் நீளமாக வளரத் தொடங்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -