ஒல்லியாக இருக்கக்கூடிய உங்கள் முடியை கூட அடர்த்தியாக, ஷைனிங்காக, பார்ப்பதற்கு வெல்வெட் துணி போல பல பலன்னு சூப்பரா காட்ட முடியும். தலைக்கு குளித்தவுடன் ஈர முடியில் இதை தடவினால்.

hair6
- Advertisement -

சில பேருக்கு பார்ப்பதற்கு முடி ரொம்பவும் மெல்லிசாக இருக்கும். ஒரு திருமணத்திற்கு அல்லது வேறு ஏதாவது விஷேஷத்திற்கு செல்லும் போது தலைக்கு குளித்தால் கூட முடி புசுபுசு வென ஷைனிங் இருக்காது. பார்ப்பதற்கு ரொம்பவும் ட்ரையாக இருக்கும். அந்த சமயத்தில் எண்ணெய் வைத்து வழித்து சீவி கொண்டும் நம்மால் விசேஷங்களுக்கு செல்ல முடியாது. இப்படிப்பட்ட இக்கட்டான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள சூப்பரான ஒரு டிப்ஸ் உள்ளது. இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக உங்களுடைய முடி பார்ப்பதற்கு பலபலன்னு சைனிங்க அடர்த்தியா தெரியும்

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் – 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1/4 டீஸ்பூன், அலோ வேரா ஜெல் – 1 ஸ்பூன், விட்டமின் E கேப்ஸ்யூல் – 1, இந்த 4 பொருட்களையும் ஒன்றாக போட்டு ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். உங்களுக்கு சீரம் போல ஒரு ஜெல் கிடைக்கும். இந்த ஜெல்லை ஒரு சின்ன பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்தலாம். (விட்டமின் E கேப்ஸ்யூலை வெட்டி அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.)

- Advertisement -

இதை எப்படி தலையில் அப்ளை செய்வது. எப்போதும்போல ஷாம்புவோ சீயக்காய் போட்டு உங்களுடைய தலையை அலசி குளித்துவிட்டு வந்து விடுங்கள். அதன் பின்பு தலையை லேசாக துவட்டி விட்டு, முடியை நேராக்கிக் கொள்ளுங்கள். சீப்பு எதுவும் வைக்க வேண்டாம். உங்களுடைய விரலாலேயே முடிகளில் உள்ள சிக்கலை நீக்கிவிட்டு, முடியை நீளமாக விட்டு, அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். முடியில் லேசாக ஈரம் இருக்க வேண்டும்.

இப்போது தயார் செய்து வைத்து இருக்கிறீர்கள் அல்லவா. அந்த சீரம், அதை லேசாக உங்களுடைய உள்ளங்கைகளில் இரண்டு அல்லது மூன்று சொட்டு, உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு மிகக் குறைந்த அளவு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த சீரத்தை இரண்டு உள்ளங்கைகளிலும் நன்றாக தேய்த்து உங்களுடைய தலைமுடிக்கு மேலே அப்ளை செய்து, அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கி நுனிப்பகுதி வரை உங்களுடைய விரல்களை முடியின் உள்ளே விட்டு விட்டு இந்த சீரத்தை அப்படியே அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய மண்டை ஓட்டில் அதாவது மயிர்கால்களில் இந்த சீரம் அப்ளை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேலே பார்ப்பதற்கு சைனிங் ஆக இருக்க வேண்டும். அதே சமயம் முடி அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் அல்லவா. மண்டைப் பகுதியை விட்டுவிட்டு, மற்ற இடங்களில் எல்லாம் இந்த சீரத்தை லேசாக அப்படியே தடவி விட்டு விடுங்கள். ஈரம் காய்ந்த பின்பு பெரிய பல் சீப்பை வைத்து சிக்கு எடுத்துவிட்டு, அதன் பின்பு பாருங்கள். உங்களுடைய முடி எப்படி உள்ளது என்று உங்களுக்கே தெரியும்.

எப்போதெல்லாம் தலைக்கு குளிக்கிறார்களோ அப்போதெல்லாம் இந்த சீரம் அப்ளை செய்து கொள்ளலாம். உங்களுடைய முடியை பார்ப்பவர்கள் எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்க முடி எப்படி இவ்வளவு சைனிங்கா இருக்கு. என்று எல்லாரும் கேப்பாங்க. நீங்க வேணும்னா ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்களேன்.

- Advertisement -