செவ்வாய்க்கிழமையில் இதை தவறியும் செய்யக்கூடாது என்று சொல்வதன் ஜோதிட காரணம் என்ன தெரியுமா?

- Advertisement -

முதலில் செவ்வாய்க்கிழமையில் எதை செய்யக்கூடாது என்று தெரியுமா? பொதுவாகவே செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது மற்றும் ஷேவிங் செய்வது கூடவே கூடாது என்று ஜோதிட சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. எதற்காக இதை சொல்லி வைத்தார்கள் என்று தெரியாமலேயே பலரும் அதை பின்பற்றி வருகிறார்கள். அதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் கூறப்பட்டாலும் ஜோதிடத்தில் அதன் உண்மை காரணம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

hair cutting

செவ்வாய் கிழமையில் முடிதிருத்தம் செய்வதும், சேவிங் செய்வதும் ஆயுளை குறைப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். செவ்வாய்க் கிழமையில் இந்த தவறை செய்பவர்களுக்கு தன் ஆயுளில் 8 மாதங்கள் குறைந்து விடுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறதாம். இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்? என்பதை பார்க்கும் பொழுது சில விஷயங்கள் புலப்படுகிறது.

- Advertisement -

செவ்வாய்க் கிழமையில் செவ்வாய் பகவான் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிடம் குறிப்பிடுகிறது. நம்முடைய உடலின் உதிரத்தில் செவ்வாய் பகவான் குடி இருப்பதால் ரத்தம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஐதீகம் உள்ளது. இப்படியாக பார்த்தால் உதிரத்தில் இருந்து தான் முடிகள் வளர்ச்சி அடைகின்றன. எனவே அன்றைய நாளில் முடி திருத்தம் செய்வதும், ஷேவிங் செய்து கொள்வதும் செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகளை உருவாக்கக் கூடும் என்பதால் இந்த செயல்களை செவ்வாய்க் கிழமையில் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கலாம்.

sevvai

அது போலவே சனி பகவானுக்கு உரிய நிறமாக கருப்பு இருந்து வருகிறது. செவ்வாய் பகவான் தரும் இன்னல்களிலிருந்து நம்மைக் பாதுகாப்பவர் சனிபகவான் தான். முடியின் நிறமும் கருப்பாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை அன்று முடியை வெட்டினால் செவ்வாய் பகவான் தரும் எதிர்மறை விளைவுகளிலிருந்து பாதுகாக்கக் கூடிய சனி பகவானின் ஆதிக்கம் குறைந்து விடும் என்பதால் இந்தக் கிழமையில் முடி வெட்டுவதைத் தவிர்க்க கூறியிருப்பார்கள்.

- Advertisement -

இவைகள் மட்டுமல்ல செவ்வாய்க்கிழமையில் அதிக அளவு செலவு செய்வதை தவிர்த்துக் கொள்வது தான் நல்லது என்று கூறப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமையில் செய்யப்படும் செலவானது சுப விரயமாக இல்லாமல் வீண் விரயமாக மாறக்கூடும் என்பதால் செவ்வாய் கிழமையில் கூடுமானவரை பணத்தை பத்திரப்படுத்திக் கொள்வது தான் நல்லது. தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர மற்ற காரணங்களுக்காக பணத்தை செவ்வாய்க்கிழமை அன்று வெளியில் எடுக்கவே கூடாது.

Sani Bagavan

செவ்வாய்க் கிழமையில் பணம் வரவாக இருக்க வேண்டுமே தவிர, செலவாக இருந்து விடக்கூடாது. இந்த நாளில் கடன் கொடுப்பதை தவிர்ப்பதால் நிறைய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே எந்தக் காரணம் கொண்டும் செவ்வாய்க் கிழமையில் கடன் கொடுக்காதீர்கள்.

- Advertisement -

money

இவைகளுக்கு பின்னால் இருக்கும் சரியான காரணங்கள் ஜோதிட ரீதியாக இல்லாவிட்டாலும் நம் முன்னோர்கள் சொல்லிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் நிச்சயம் அறிவியலும், ஆன்மீகமும் ஒளிந்து கொண்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்மவர்களில் பலரும் இதை செய்யாதே என்று கூறினால் அதை தான் செய்வார்கள். அதனால் தான் பல விஷயங்கள் மறைமுகமாகவே முன்னோர்கள் மக்களுக்கு கூறியுள்ளனர்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் எத்தனை வாசல்கள் உள்ளன? வீட்டின் வாசல் இப்படி இருந்தால் ஆரோக்கியமும், செல்வமும் அதிகரிக்குமாம் தெரியுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -