உங்கள் வீட்டில் எத்தனை வாசல்கள் உள்ளன? வீட்டின் வாசல் இப்படி இருந்தால் ஆரோக்கியமும், செல்வமும் அதிகரிக்குமாம் தெரியுமா?

door-vasal-lakshmi

ஒரு சிலரது வீடுகளில் நிறைய வாசல் அமைத்து கட்டியிருப்பார்கள். ஒரு சிலருக்கு வீட்டிற்கு முன்புறமும் பின்புறமும் என்று இரண்டு வாசல்கள் இருக்கும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஒற்றை வாசல் தான் பிரதானமாக இருக்கும். இப்படியாக ஒரு வீட்டிற்கு ஒன்றிலிருந்து மூன்று வாசல்கள் வரை வைக்கலாம். அதற்கு மேல் வாசல்கள் வைத்து பிரம்மாண்டமாக கட்டுபவர்கள் அதில் அன்றாடம் புழங்கும் வாய்ப்பை இழப்பார்கள். அதாவது அந்த வீட்டில் குடியிருக்க முடியாத சூழ்நிலை உருவாகும். மற்ற காரியங்களுக்கு வேண்டுமானால் அந்த வீடு பயன்படலாம்.

home-door

ஒரு வீட்டிற்கு வாசல் என்பது மிக முக்கியமான பகுதியாகும். மகாலட்சுமி உள்ளே வருவதற்கு இந்த வாசல் தான் நுழைவாக இருக்கின்றன. இதனை சரியாக அமைத்து விட்டால் அந்த வீட்டில் பிரச்சனைகளே இருக்காது. வீட்டின் வாசலை எந்த திசையில் வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தெற்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்திருப்பது கூடவே கூடாது.

தென்கிழக்கு, தென்மேற்கு பகுதியில் கண்டிப்பாக தலைவாசல் இருக்கவே கூடாது. இந்த வீடுகளில் நிறைய பிரச்சனைகள், கஷ்டங்கள், துர்மரணங்கள் நிச்சயம் நிகழும். இதிலும் விதிவிலக்காக 100% சரியாக தெற்கு திசையில் வாசல் அமைத்திருந்தால் அவ்வளவு பெரிதாக பாதிப்புகள் இருக்காது. மற்றபடி லேசாக தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைந்திருந்தாலும் மேற்கூறிய பாதிப்பு ஏற்படும்.

vastu-direction

முந்தைய காலங்களில் எல்லாம் வீட்டில் இரண்டு வாசல் கதவுகளை வைத்து கட்டி இருப்பதை நாம் பார்த்ததுண்டு. இது போல் நிறைய ஜன்னல்களும், 2 வாசல்களும் இருக்கும் வீடுகளில் வாயுவானது உள்ளே பரவும் வெளியே போகவும் சுலபமாக இருப்பதால் அந்த வீட்டின் ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் அதிகரித்து காணப்படும். முன்புற வாசலுக்கு நேரே பின்புற வாசல் அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும். இப்போதெல்லாம் அது போல் வைத்து வீடுகள் கட்டப்படுவதில்லை.

- Advertisement -

நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும் நிறைய அற்புதமான தத்துவங்களை உள்ளடக்கி இருக்கும். இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் இன்று நவீன வீடுகளை ஏனோ தானோ என்று கட்டிக் கொண்டு விடுகிறார்கள். இதனால் வீட்டில் பிரச்சனைகளும், துன்பங்களும் அதிகரித்து வருகின்றன.

nila-vasal

உண்மையில் ஒற்றை வாசலை விட பின்புறமாக வாசலை வைத்து அமைந்திருக்கும் வீடானது நல்ல சுபீட்சம் பெற்றிருக்கும். அந்த வீட்டில் எப்போதும் கலகலப்புடன் நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு நிறைந்திருக்கும். அவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு மட்டும் குறைவே இருக்காது.

vasal-kathavu

ஒரு சில வீடுகள் எல்லாம் பார்த்தால் குடோன் போல ஒரு ஜன்னல் கூட இல்லாமல் கட்டி வைத்திருப்பார்கள். அந்த வீட்டில் எல்லாம் தப்பி தவறியும் குடி போய் விடாதீர்கள். நிச்சயம் உங்களுக்கு அங்கு வீண் விரயங்களும், மனம் சார்ந்த பல பிரச்சினைகளும் வந்து சேரும். கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாமல் போய்விடும். ஆரோக்கிய பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்து விடும். வீட்டில் எப்பொழுதும் வாசல் வழியாக காற்றோட்டம் நிரம்பியிருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
வீட்டின் இந்த திசையில் இதை மட்டும் வைத்தால் செல்வ வளம் பெருகுமாம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.