வீட்டில் தெய்வ கடாட்சம் நிலைத்து இருக்க, சந்தோஷம் பொங்கி வழிய வரவேற்பறையில் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தாலே போதும்.

budhan
- Advertisement -

வீட்டில் மற்ற இடங்கள் சுத்தமாக இருக்கின்றதோ இல்லையோ, ‘இந்த வரவேற்பரை சுத்தமாக இருந்தால் தான்’ மனதிற்கு ஒரு நிறைவு கிடைக்கின்றது. இந்த வார்த்தையை நிறைய பேர் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். நீங்கள் இல்லத்தரசிகள் ஆக இருந்தால் இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை நிச்சயமாக உங்களால் உணர முடியும். வீட்டு வரவேற்பறை சுத்தமாக இருக்கும்போது வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் சரி, மற்ற உறுப்பினர்களுக்கும் சரி, அவர்களை அறியாமலேயே ஒரு மனநிம்மதி ஏற்படும். சுத்தமாக இருக்கும் வரவேற்பறையில் அமர்ந்து நேரத்தை கழிப்பது மனதிற்கு சந்தோஷத்தை தரும்.

home-hall-astro

அந்த வரவேற்பறை அசுத்தமாக இருந்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு மனக்குழப்பம் வருவதற்கு என்ன காரணம். வீட்டு வரவேற்பறை சுத்தமாக இல்லாத சமயத்தில் வீட்டில் இருப்பவர்களுடைய நிம்மதி கெடுவதற்கு என்ன காரணம். இதற்குப் பின்னால் என்ன விஷயம் மறைந்துள்ளது. என்பதை உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா. ஆன்மீக ரீதியாக இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

வீட்டின் வரவேற்பறை என்பது பிரம்மஸ்தானம் என்று சொல்லப்பட்டுள்ளது. வாஸ்துப்படி பிரம்ம ஸ்தானத்தில் தான் வீட்டின் வரவேற்பறை அமைக்கப்படும். இந்த வரவேற்பறை புதன் கிரகத்திற்கு உரிய இடமாக சொல்லப்பட்டுள்ளது. குழப்பமில்லாத தெளிவான மனது, அறிவாற்றல், கல்வி, திறமை, சந்தோஷம், புத்திக்கூர்மை இவைகளை கொடுப்பது புதன் கிரகம் தான்.

hall

இதனால்தான் வரவேற்பரை சுத்தமாக இருக்கும் போது நம்முடைய மனது தெளிவாக இருக்கின்றது. வரவேற்பறை அசத்துமாக இருந்தால் நம்முடைய மனதும் சோர்வடைகிறது. எந்த வீட்டில் வரவேற்பறை எப்போதும் சுத்தமாக பராமரிக்க படுகின்றதோ அந்த வீட்டில் புதன் பகவானின் ஆதிக்கம் நிலைத்திருக்கும். சந்தோஷம் குடிகொள்ளும். சந்தோசம் இருக்கும் இடத்தில் தெய்வசக்தி நிறைந்திருக்கும். தெய்வசக்தி இருக்கும் இடத்தில் பணத்திற்கு பிரச்சனை இருக்காது. குடும்பத்தில் வறுமை இருக்காது. வீட்டில் இருப்பவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் மனக் குழப்பம் இருக்காது. வீட்டில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து தெளிவான முடிவை எடுப்பார்கள்.

- Advertisement -

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். புதன் பகவானுக்கு உரிய இந்த வரவேற்பறையில் நாம் வைக்க வேண்டிய பொருள் என்ன தெரியுமா? ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு, அந்த தண்ணீரை வரவேற்பரையில் வைத்து விட்டாலே போதும். உங்களுடைய வீட்டில் தெய்வ கடாட்சம் நிலைத்திருக்கும்.

perumal1

புதன் கிரகம் என்பது பெருமாளின் அம்சம் கொண்டது. பெருமாளுக்கு மிகவும் உகந்த பொருள் என்றால் அது பச்சைகற்பூரம். வரவேற்பறையில் பச்சைக்கற்பூரம் கலந்த தண்ணீரை வைக்கும்போது உங்களுடைய வீட்டிற்கு புதன் பகவானின் அருளாசி முழுமையாக கிடைக்கும். செல்வ செழிப்பு இருக்கும்.

வரவேற்பறையில் வைக்கக்கூடிய தண்ணீர் குடிக்கின்ற சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும். தண்ணீரை ஊற்றி வைக்கக்கூடிய டம்ளர் சுத்தமான எச்சில் படாத டம்ளராக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை வைத்தால் கூட போதுமானது. தினமும் தண்ணீரை மாற்ற வேண்டுமென்று அவசியமில்லை. (உங்கள் வீட்டில் பித்தளை சொம்பு, செம்பினாலான சொம்பு, கண்ணாடி டம்ளர் இதில் எதில் வேண்டுமென்றாலும் இந்த தண்ணீரை வைக்கலாம். பிளாஸ்டிக் டம்ளர்களில் மட்டும் இந்த தண்ணீரை வைக்கக் கூடாது.)

happy

இந்த சின்ன பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு உங்களுடைய வீட்டில் ஒரு நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -