அவர் ஒரு லெஜண்ட். இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள தோனியை பாராட்டவில்லை என்றும் மரியாதை கொடுங்கள் – கங்குலி ஆதங்கம்

Ganguly

இந்த வருடம் 2019ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தொடரான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற உள்ளன. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து நாடுகளும் இந்த தொடருக்காக தயாராகி வருகின்றனர்.

dhoni 1

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி தோனி குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் கங்குலி கூறியதாவது : எனது தலைமையில் தான் தோனி அறிமுகம் ஆனார். பிறகு தோனி ஒரு வீரராகவும் மற்றும் கேப்டனாகவும் தனது திறமையினை உலகம் அறிய நிறைய சாதனைகளை அவர் புரிந்தார்.

கடந்த ஆண்டு சற்று சாதாரணமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தோனி இந்த வருடம் மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்கு மாறியுள்ளார் என்று நினைக்கிறன். 37 வயது ஆகும் தோனி இந்த உலகக்கோப்பை தொடர் மட்டுமே ஆட முடியும். ஆகையால், ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவினை தந்து உலககோப்பையினை வென்று அவரை வெற்றியுடன் வழி அனுப்ப வேண்டும்.

dhoni

எனவே, தோனியின் ஆட்டம் குறித்து நீங்கள் பாராட்டவில்லை என்றாலும் அவருக்கு மரியாதை கொடுங்கள். அவர் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வீரர்களில் அவரும் ஒருவர். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும் அவர் புகழ் என்றுமே நிலைத்து இருக்கும். எனவே, இன்னும் சில மாதங்களுக்கு தோனிக்கு சிறப்பான ஆதரவினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கங்குலி கூறினார்.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை அணியில் ரஹானே மற்றும் விஜய் ஷங்கருக்கு இடம். ரிஷப் பண்டின் இடம் தான் தலைவலி – உ.கோ தேர்வுக்குழு தலைவர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்