உங்கள் கைகள் கருப்பாக இருக்கிறதா? கைகளையும் உங்கள் முகத்தைப் போலவே வெள்ளையாக மாற்ற இந்த முறையை உடனே செய்து பாருங்கள்

hand
- Advertisement -

வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்பொழுதும் கை, கால்களை சுத்தமாக வைத்திருக்கும் படி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எனவே தினமும் வெளியில் விளையாடிவிட்டு வரும் பொழுது கை, கால்களை தண்ணீரில் சுத்தமாக கழுவிய பின்னர் தான் வீட்டிற்குள்ளேயே அனுமதிப்பார்கள். இவ்வாறு செல்வது நாம் சுத்தமாக இருப்பதற்காக மட்டுமல்ல. நமது கை, கால்களையும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். நமது உடலில் கைகள் தான் அதிகப்படியான வேலைகளை செய்வதற்கு பயன்படுகிறது. எனவே கைகளை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். அதில் ஒரு சிலருக்கு முகத்தின் நிறத்தைவிட கைகளில் நிறம் கருப்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்தத் டிப்ஸை முறையாக பயன்படுத்தி வர கைகளை கலராக மாற்ற முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

முதலில் கை நகங்களில் இருக்கும் அழுக்குகளை சுத்தமாக க்ளீன் செய்ய வேண்டும். பிறகு நகங்களை அளவாக வெட்டி கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் எண்ணெய் வைத்து விரல்களின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

மாதம் ஒருமுறை மெனிக்யூர் செய்யும் பொழுது கைகளில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, கைகள் மென்மையாக நல்ல நிறத்தில் மாறிவிடும். முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் மைல்டான ஷாம்பு 2 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் கைகளை ஷாம்பு கலந்த தண்ணீரில் 10 லிருந்து 15 நிமிடமாவது ஊற வைக்க வேண்டும். பிறகு கைகள் ஈரப்பதத்துடன் இருக்கும் பொழுது, கைகளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது கைகளில் இருக்கும் அனைத்து விதமான அழுக்குகளும், இறந்த செல்களும் முழுமையாக வெளியேறி விடும். அதன் பின் கைகள் கலராக மாறுவதற்கு இந்த டிப்ஸ் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் 2ஸ்பூன் காஃபி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும். பிறகு இவர்கள் மூன்று ஸ்பூன் தயிர் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கைகள் முழுவதும் தடவி விட வேண்டும். பிறகு ஐந்திலிருந்து பத்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் இதனை பத்து நிமிடத்திற்கு அப்படியே உலர விட்டு, அதன் பிறகு குளிர்ந்த நீரில் சுத்தமாக கழுவிவிட வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் உங்கள் கைகளில் நிறம் முகத்தின் நிறத்தைப் போலவே மாறிவிடும். பின்னர் தினமும் இரவில் லேசாக தேங்காய் எண்ணெய் தேய்த்து கைகளை மசாஜ் செய்ய வேண்டும். அதேபோல் வெளியில் வேலை செய்வதாக இருந்தால் முடிந்த வரை கையுறைகளை பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

- Advertisement -