அனுமன் 108 போற்றி

hanuman-1-1
- Advertisement -

மனிதர்களாக பிறந்தவர்கள் யாருமே முழுமையானவர்கள் கிடையாது. நம் வாழ்வில் நாம் காணும் எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். இந்த குறைபாடுகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு ஜாதகத்தில் கிரகங்களின் நிலையால் கஷ்டங்கள் ஏற்படும் நிலை இருக்கிறது. மற்ற சிலருக்கு குழந்தை பாக்கியமின்மை, மனதில் தைரியம் மற்றும் தன்நம்பிக்கை குறைவு போன்ற குறைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் தீர்க்கும் தெய்வமாக இருக்கும் ஸ்ரீ அனுமனின் 108 போற்றி துதி இதோ.

hanuman

அனுமன் 108 போற்றி

1. ஓம் அனுமனே போற்றி
2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
3. ஓம் அறக்காவலனே போற்றி
4. ஓம் அவதார புருஷனே போற்றி
5. ஓம் அறிஞனே போற்றி
6. ஓம் அடக்கவடிவே போற்றி
7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
10.ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
15. ஓம் இசை ஞானியே போற்றி
16. ஓம் இறை வடிவே போற்றி
17. ஓம் ஒப்பிலானே போற்றி
18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
19. ஓம் கதாயுதனே போற்றி
20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
22. ஓம் கர்மயோகியே போற்றி
23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
25. ஓம் கடல் தாவியவனே போற்றி
26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
29. ஓம் கூப்பிய கரனே போற்றி
30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி

- Advertisement -

31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
39. ஓம் சூராதி சூரனே போற்றி
40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
44. ஓம் சோக நாசகனே போற்றி
45. ஓம் தவயோகியே போற்றி
46. ஓம் தத்துவஞானியே போற்றி
47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49. ஓம் தீதழிப்பவனே போற்றி
50. ஓம் தீயும் சுடானே போற்றி
51. ஓம் நரஹரியானவனே போற்றி
52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
55. ஓம் பண்டிதனே போற்றி
56. ஓம் பஞ்சமுகனே போற்றி
57. ஓம் பக்தி வடிவனே போற்றி
58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி

hanuman

61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
66. ஓம் பீம சோதரனே போற்றி
67. ஓம் புலனை வென்றவனே போற்றி
68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
69. ஓம் புண்ணியனே போற்றி
70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
71. ஓம் மதி மந்திரியே போற்றி
72. ஓம் மனோவேகனே போற்றி
73. ஓம் மாவீரனே போற்றி
74. ஓம் மாருதியே போற்றி
75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
79. ஓம் ராமதாசனே போற்றி
80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
81. ஓம் ராமதூதனே போற்றி
82. ஓம் ராம சோதரனே போற்றி
83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
90. ஓம் ருத்ர வடிவனே போற்றி

- Advertisement -

Lord Hanuman

91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
93. ஓம் லங்கா தகனனே போற்றி
94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
96. ஓம் வாயுகுமாரனே போற்றி
97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
101. ஓம் விஸ்வரூபனே போற்றி
102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

hanuman

ராமதூதனாகிய ஆஞ்சநேயரை போற்றும் 108 போற்றி துதி இது. இந்த துதியை தினமும் குளித்து முடித்து விட்டு, உடல் மற்றும் மன சுத்தியோடு அருகிலிலுள்ள அனுமன் ஆலயம் அல்லது அனுமன் சந்நிதிக்கு சென்று, அனுமனுக்கு வெற்றிலை அல்லது துளசி மாலை சாற்றி இந்த 108 போற்றி துதிகளை மனமொன்றி படிப்பதால் உங்களை பீடித்திருக்கும் சனி கிரக தோஷங்களின் கடுமை தன்மை குறையும். சித்தம் தெளிவு பெறும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியுண்டாகும்.

- Advertisement -

வானர இனத்தில் பிறந்த அனுமனுக்கு சுந்தரன் என்கிற ஒரு பெயரும் உண்டு. அந்த அனுமனை போற்றும் ராமாயண இதிகாசத்தின் ஒரு பகுதியாக சுந்தர காண்டம் இருக்கிறது. பக்தி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு சிறந்த உதாரணமாக இன்றும் கூறப்படுகிறார் ஸ்ரீ ஆஞ்சநேயர். சிவ பெருமானின் அம்சமான ஆஞ்சநேயர் பல தேவர்கள் மற்றும் ரிஷிகளின் வரங்களை பெற்றதோடு சிரஞ்சீவித்துவம் எனப்படும் இறவா வரத்தையும் பெற்றவராவார். அவரை வழிபடுவதால் ஒருவருக்கு சகல பாக்கியங்களும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
காமாட்சி அம்மன் துக்க நிவாரண அஷ்டகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hanuman 108 potri in Tamil. It is also called Hanuman stuti in Tamil or Anjaneyar potri Manthiram in Tamil or Hanuman thuthi in Tamil or Hanuman manthiram in Tamil or Anjaneyar manthiram in Tamil.

- Advertisement -