அனுமனுக்கு ‘வெண்ணெய்’ சாத்தி வழிபடுவதால் இவ்வளவு நன்மைகள் உண்டாகுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

hanuman-vennai-butter

ஸ்ரீராமரின் மீது அதிகம் அன்பு கொண்டுள்ள அனுமனுக்கு வெண்ணெய் சாத்தப்படுவது ஏன் என்று தெரியுமா? அவருக்கு வெண்ணை சாற்றி வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக உள்ளன. உண்மையான பக்தியால் சிறந்த கடவுளாக விளங்கும் அனுமனுக்கு நாமும் உண்மையான பக்தியை கொடுத்தால் நமக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பார். அனுமனுக்கு வெண்ணெய் சாற்றுவதன் பின்னணி என்ன? அதனால் கிடைக்கும் நன்மைகளும் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

hanuman

ராமனுக்கும், அனுமனுக்கும் இடையே இருக்கும் பந்தம் நமக்கும், கடவுளுக்கும் இடையே இருக்கும் பக்தியையும் மிஞ்சியது ஆகும். தன் நெஞ்சைப் பிளந்து ஸ்ரீராமர் இருக்கிறார் என்பதை உலகிற்கு பறை சாற்றிய அவருடைய பக்திக்கு நிகர் எதுவுமே இல்லை என்று கூறலாம். இராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணனை வென்ற ஸ்ரீராமருக்கு ஆபத்து ஒன்று காத்துக் கொண்டிருந்தது. ராவணனுடைய தோல்விக்குப் பிறகு வெகுண்டெழுந்த இரண்டு அரக்கர்கள் எப்படியாவது ராமனை தீர்த்துவிட வேண்டும் என்று சிந்தித்து விட்டனர். அந்த இரண்டு அரக்கர்களையும் ஒழித்துக்கட்ட ஸ்ரீராமர் தன் தீவிர பக்தரான அனுமாருக்கு கட்டளை இட்டார். இதனால் அரக்கர்களை அழிக்க ஹனுமர் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

அந்த வேளையில் அனுமனை போர் புரிய வழி அனுப்புவதற்காக மற்ற தெய்வங்களும், தேவாதி தேவர்களும், அவருக்கு பல்வேறு விதமான ஆயுதங்களை கொடுத்து வந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஸ்ரீகிருஷ்ணர் ஆயுதங்களுக்கு பதிலாக வேறு ஒன்றை கொடுத்தார். அந்த பொருள் தீர்வதற்குள் எப்படியாவது அரக்கர்களை அழித்துவிட வேண்டும் என்பது குறிப்பாகும். அது என்ன பொருள் தெரியுமா?

butter-vennai

அதுதான் இன்று ஆஞ்சநேயருக்கு நாம் சாற்றும் வெண்ணெய் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் என்பது விருப்பமான ஒன்றாக இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆக கிருஷ்ணர் அனுமனிடம் வெண்ணை கொடுத்து அந்த வெண்ணை உருகுவதற்குள் அரக்கர்களை அழித்து விட்டு திரும்ப வேண்டும் என்று கூறிவிட்டு வழி அனுப்பி வைத்தார்.

அதே உத்வேகத்துடன் சென்ற ஆஞ்சநேயர் வெண்ணெய் உருகுவதற்குள் ராமனை அழிக்க வந்த அந்த இரண்டு அரக்கர்களையும் ஒழித்துக் கட்டினார் என்பது புராண வரலாறு. இதனால் அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் பகைவர்கள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம். மேலும் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் நீங்க அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது என்பது மிகவும் விசேஷமான பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும்.

hanuman-heart

வெண்ணை என்பது மிகவும் குளிர்ச்சியூட்டக் கூடிய ஒரு பொருளாகும். மேலும் எவ்வளவு நாட்கள் அதனை பதப்படுத்தி வைத்தாலும் கெட்டுப் போவது இல்லை. வெண்மை நிறமுள்ள வெண்ணை, பக்தர்களின் தூய்மையான உள்ளத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. எவரொருவர் தூய்மையான உள்ளத்துடன் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுகிறார்களோ! அவர்களுக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். வெண்ணெய் உருகுவது போல அவர்களுடைய பிரச்சினைகளும் உருகி விடும் என்பது நம்பிக்கை. எனவே ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பொழுது வெண்ணை காப்பு சாற்றி நீங்களும் பலன் பெறலாம்.